முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வில்லெஜ் குக்கிங் சானலின் வளர்ச்சி கூறுவதென்ன?





ஊடகங்களில் மிக வேகமாக பணம் சம்பாதிக்க, புகழ் பெற சாத்தியமுள்ளது சினிமா தான். அதிலும் ஒரு படைப்பாளியாக விரும்புவோர் உதவி இயக்குநராகி, பல வருடங்கள் போராடி ஒரு தயாரிப்பாளரைப் பெற்று, பல மாதங்கள் உழைத்து திரைக்கதையை உருவாக்கி, நடிகர்களை ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பு நடுவில் நின்று விடக் கூடாதே எனப் பதபதைத்துக் கொண்டு எடுத்து முடித்து, திரையரங்குகள் அமைந்து வந்து வெளியிட்டு, மக்களிடமும் ஊடகத்திலும் கவனிப்பும் பாராட்டும் கிடைத்து … அப்பாடா என்றாகி விடும். வருடத்தில் நூற்றுக்கணக்கில் வெளியாகும் படங்களில் விரல் விட்டு எண்ணுமளவுக்கு படங்களே இப்படி இயக்குனருக்கு பணமும் பெயரும் சம்பாதித்து தருகின்றன. அதுவும் உங்கள் படம் 5 கோடி பட்ஜெட் என்றால் இயக்குநர் சம்பளமாக 25 லட்சம் வருமா? ஆனால் அதை அடைய நீங்கள் 10-20 வருடங்கள் வாழ்க்கையை வாடகை அறைகளிலும் இருட்டிலும் தியாகம் செய்ய வேண்டும். ராம் தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவர். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் இருந்து சினிமாவில் இருக்கிறார். அவருடைய படங்கள் தேசிய விருதையும், உலகத் திரைப்பட விழாக்களில் அங்கீகாரமும் பெற்றிருக்கின்றன. ஆனால் சில வருடங்களுக்கு அவர் BOFTA திரைப்பட க்கல்லூரியில் விரிவுரையாளராக சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார் என அறிந்து மிகவும் நொந்து போனேன். அவரிடம் மாணவராக இருப்பது ஒரு கொடுப்பினை தான், ஆனால் மாத சம்பளத்துக்கு வேலை செய்யும் இடத்தில் ஏன் அவரை நாம் வைத்திருக்கிறோம்? ராமாவது மீண்டுமொரு நல்ல படமெடுத்து மேலும் சாதனைகள் படைப்பார். இன்னும் சில இயக்குநர்கள் படமெடுக்கும் வாய்ப்பில்லாமல் சிறிய வேலைகளை சினிமாவுக்குள் செய்து ஒடுங்கிப் போய் விடுகிறார்கள்.


இப்போது அப்படியே யுடியூப் சேனல்களின் உலகத்துக்கு வாருங்கள். வில்லேஜ் குக்குங் சானலை மூன்று வருடங்களுக்கு முன்பு சில கிராமத்து இளைஞர்களும் ஒரு பெரிசும் சேர்ந்து ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு படக்கருவியின் நுட்பங்களோ, கதை சொல்லும் திறனோ, ஒரு துறைசார் நிபுணத்துவமோ இல்லை. அவர்கள் யுடியூபில் வருவதற்காக வருடக்கணக்கில் வாழ்க்கையை தியாகம் செய்யவோ தயாராகவோ இல்லை. யுடியூபில் என்னென்னமோ செய்து பார்த்து சரி வராமல் வில்லெஜ் புட் பாக்டெரி பாணியில் வெளிப்புறத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் கிராமத்து சமையலை செய்து படம்பிடிப்பு பதிவேற்றுகிறார்கள். அது பெரிய வரவேற்பு பெற்று இன்று 1 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்றிருக்கிறார்கள். மாத வருமானம் நிச்சயம் லட்சங்களில் இருக்கும். ராகுல் காந்தி இவர்களுடைய ஷோவில் வரும் வரை இவர்கள் இப்படி சம்பாதிக்கிற விசயம் ஊர்க்காரர்களுக்கே தெரியாது. இப்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு 15 லட்சம் கொடுக்குமளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேரால் வருடத்திற்கு 15 லட்சம் வருமானம் ஈட்ட முடியும்? 


ரொம்ப அவமானமாக இருக்கும் என்பதால் நான் தமிழ் எழுத்தாளர்களை இந்த விசயத்துக்குள் கொண்டு வரவே இல்லை. சினிமாவே கலைஞர்கள் சம்பாதிக்க சிறந்த இடம் எனும் போது யுடியூபர்கள் அதையும் இப்போது கடந்து போகிறாரக்ள். அடுத்த ஒரு பத்தாண்டில் வெகுஜன கலைஞர்கள் கோடம்பாக்கத்தை அல்ல யுடியூபை நோக்கியே படையெடுப்பார்கள். ஏனென்றால் இந்த கல்வியறிவும் தொழில்நுட்பமும் தெரியாத இளைஞர்களாலே இவ்வளவு சம்பாதிக்க முடியுமெனில் திறமையும் அறிவும் படைத்தவரகளால் என்னென்ன முடியும்? (இவர்களை மட்டம் தட்டும் விதமாக நான் இதைச் சொல்லவில்லை.)


ஆனால் வழமையான உள்ளடக்கத்தை வைத்து யுடியூபில் குப்பை கொட்ட முடியாது. செலிபிரிட்டி ஊடகவியலாளர்கள் சமூகப் பிரச்சனைகளை விவாதித்து சில லட்சம் பார்வைகளைப் பெற முடியும். செலிபிரிட்டி நடிகர்கள், ரியாலிட்டி நட்சத்திரங்கள் நிறுவனங்களின் துணை கொண்டு காணொலிகளை பதிவேற்றி விளம்பரங்களைப் பெற முடியும். ஆனால் கோடிகளைத் தொட அதிரடியான, எதிர்பாராத, வித்தியாசமான காரியங்களை படம்பிடிக்கும் யுடியூபர்களாலே முடியும். செக்ஸ், வன்முறை, சாகசம், சமையல் என இனி ஊடகங்களின் கவனம் செல்லும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் paradigm shift என சொல்வார்கள். அப்படியான ஒன்று இங்கு நிகழ்ந்திருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...