முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லக்னவி பிரியாணி

லக்னவி பிரியாணி

சுவையில் ஹைதராபாத் பிரியாணிக்கு அடுத்த இடம் லக்னவி பிரியாணிக்குத் தான் இருக்க வேண்டும் என இன்று மதியம் ஒரு ஸ்பூனை வாயில் வைத்ததும் ஒரு அட்டகாசமான மசாலா வாசனை என்னை அடித்துத் தூக்கியதே அந்த நொடியே முடிவு செய்து விட்டேன். வாசனை தான் முழுக்க முழுக்க லக்னவி பிரியாணியை தூக்கி நிறுத்துகிறது. நாம் பொதுவாக நாவால் உணவை சுவைத்து பற்களால் அரைத்து வாயில் தக்க வைத்து மெல்ல முழுங்கி முழு இன்பத்தையும் ரசிப்போம். ஆனால் லக்னவி பிரியாணியோ மூக்கால் ரசித்து வாயால் உண்ணப்பட வேண்டியது. ஒவ்வொரு ஸ்பூனிலும் நாம் அந்த சோறையோ, மசாலாவையோ அல்ல நிறைய ஜிவ்வென்ற மென்மையான மணத்தையே எடுத்து உண்கிறோம். அதுவும் தமிழ்நாட்டு பிரியாணியில் புதினா வாசனை முக்கியம் எனில், லக்னவ் பிரியாணியில் அது இல்லை. மாறாக தாழம்பூ நீர், பன்னீர், குங்குமப் பூ கலந்த பால், உடைத்த ஜாதிக்காய் ஆகியவற்றின் வாசனையே பிரதானம். சொல்லப்போனால் அவர்கள் வேறு மசாலாவே சேர்ப்பதில்லை. நெய்யும் அதிகமாக இல்லை. 
இன்னொரு அருமையான அம்சம் அதன் மசாலா நன்கு ஊறிய சிக்கன் துண்டுகள். இந்த பிரியாணியில் சிக்கன் கிட்டத்தட்ட மட்டனைப் போல மிருதுவாக ஜூஸியாக இருக்கிறது. அதற்கு ஒரு தொழில்வித்தை வைத்திருக்கிறார்கள். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதில் இஞ்சிப்பூண்டு பொட்டு வதக்கிய பின் அதன் மீது சிக்கன் துண்டுகளும் கடைசியாக பிரியாணி இலை, ஜாதிக்காய், தயிர், பால், காரப்பொடி, உப்பு எல்லாம் இறுதியில் சேர்க்கிறார்கள். இது வெந்த பிறகு சிக்கனை தனியாக எடுத்து வைத்த பின், மசாலாவை வடிகட்டி சாறை இன்னொரு பக்கம் எடுத்து வைக்கிறார்கள். இந்த சாறில் மிதக்கும் எண்ணெய்யையும் தனியாக எடுத்து வைக்கிறார்கள் (அதன் வாசனைக்காக). அடுத்து,  வடிகட்டியதில் மீந்த வெங்காய மலாசாவுடன் மீண்டும் சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கி எடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் உப்பு, நறுக்கின பச்சை மிளகாய், பட்டை, ஏலக்காய் போட்ட நீரில் பாஸ்மதி அரிசியைப் போட்டு அரைவேக்காடு வேக வைக்கிறார்கள். அடுத்து குக்கரில் / குண்டானில் பாதி வெந்த சோறு, வதக்கின சிக்கனை அடுக்கடுக்காய் வைத்து, அதன் மீது அந்த மிதக்கும் எண்ணெய் சாறு, தாழம்பூ நீர், பன்னீர், குங்குமப் பூ கலந்த பால் ஆகியவற்றை சேர்த்து தம் வைத்து விடுவார்கள். பிரியாணி தயாரானதும் அதன் மீது பொரித்த வெங்காயத்தை தூவுகிறார்கள். இப்படித்தான் வாசனைகளின் சொர்க்கமான பிரியாணி தயாராகிறது.

இப்போது சொல்லுங்க இதை விட சிறந்த ஒரு கலைப்படைப்பு சாப்பாட்டில் இருக்க முடியுமா?

பெங்களூர்வாசி நண்பர்களுக்கு biriyani life உணவகத்தை பரிந்துரைக்கிறேன். அங்குள்ள பிரியாணியை ஒரு தடவை சாப்பிட்டால் மறக்கவே முடியாது. ஒரே பிரச்சனை பாதி தட்டு வந்ததும் திகட்டி விடுகிறது. காரமும் கொஞ்சம் தூக்கல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...