முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக பாஜகவை காப்பாற்ற ஒரே வழி


தமிழக பாஜகவை காப்பாற்ற ஒரே வழி

இதை நான் கே.டி ராகவனை ஆதரிக்கும் பொருட்டு எழுதவில்லை. இது சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்படும் எனும் நம்பிக்கையில் எழுதுகிறேன்:  கே.டி ராகவனின் இந்த ஆபாச வீடியோ வந்து பந்தாடப்பட்டு பதவி இழந்த பிறகு எனக்கு அவர் மீதுள்ள கோபம், எரிச்சல் எல்லாம் மறைந்து விட்டது. முன்பு அவரைப் பார்த்தாலே செம கடுப்பு வரும். ஆனால் இப்போது பாவம் எனத் தோன்றுகிறது. அவர் அதிகார துஷ்பிரயோகம் பண்ணித்தான் அந்த வெட் சாட்டில் ஈடுபட்டார், ஆகையால் பதவியில் இருந்து தூக்கப்பட்டது நியாயம் தான் என நம்புகிறேன். இருந்தாலும் அண்ணாமலை ஒரு குழந்தையை குளிப்பாட்டி குப்பைத் தொட்டியில் போட்டது போல இவரைத் தூக்கி செப்டிக் டேங்கில் போட்டு மூடி விட்டார். இனி ஒரு போதும் எழுந்து வர முடியாத வீழ்ச்சி இது. இதன் பின்னால் உள்ள நிஜமான வில்லன் ஜி.முருகனே, அவர் தான் இந்த காணொலி வெளியான பின்னர் ஊடகங்களை தொடர்புகொண்டு இதைப் பற்றி அதிகமாகப் பேசும்படி தூண்டினார் என்று நக்கீரன் பிரகாஷ் சொல்லுகிறார். இது ஒரு படுபயங்கர திருப்பம்.

பிரகாஷின் பார்வையில், முதலில் தேர்தலுக்குப் பின் ஜி.முருகன் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத பாஜக தலைவர்களை காலி செய்ய ராகவன் ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார். அவர் தினமலர் மூலம் இத்தலைவர்களின் பலான செயல்பாடுகளை பாஜக மேலிடம் அறிந்து கண்டித்தது பற்றின சேதிகளை வெளியிடுகிறது. விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. இதன் பின்னால் ராகவனே என அறிந்து கொண்ட முருகன் தன் ஆதரவாளர்களைக் கொண்டு ராகவனின் பாலியல் அத்துமீறல்கள் பற்றின ஆதாரங்களை சேகரிக்கிறார்; அவை எப்படியோ மதனிடம் வந்து சேர்கின்றன. மதன் அண்ணாமலையிடம் போகிறார் அல்லது அண்ணாமலையே அவரிடம் வருகிறாரோ தெரியவில்லை. ஆனால் அண்ணாமலை யோசிக்கிறார்: “எப்படியும் முருகன் காலியாகி விட்டார். அவர் வீடியோவும் அகப்பட்ட நிலையில் இனி அவர் நம் பிடிக்குள். ராகவனை அப்படி கட்டியாள முடியாது. அவரை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தி ஒரேயடியாக துரத்த வேண்டும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!”. அண்ணாமலை அந்த காணொலியை பதிவேற்றும்படி உத்தரவிடுகிறார். இங்கு அவர் எதிர்பாராதது எந்த எதிரியையும் அப்படி புறங்கையால் டீல் பண்ண முடியாது என்பதே. ஒரு பூனைக் கூடி எதிர்த்து சீறும். ராகவன் தன் அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்தி தன் மீது இதற்கு மேல் சேறு வாரி இறைக்கப்படாதபடி தற்காத்துக் கொள்கிறார். விளைவாக மதனுக்கும் அண்ணாமலைக்கும் முட்டிக்கொள்ள, மதன் அண்ணாமலையை நிர்வாணப்படுத்துகிறார். ஒரே நாளில் அண்ணாமலை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் வில்லன் ஆகி விடுகிறார். அவர் ஒரு சிறுபிள்ளைத்தனமான குரூரமான அரசியல்வாதி, சாடிஸ்ட் எனத் தெரிய வருகிறது.

 இந்த இடத்தில் தான் எனக்கும் ராகவன் மீது சற்றே soft corner வருகிறது. இப்போதெல்லாம் நானும் நண்பர்களும் கே.டி ராகவனைப் பற்றி பேசிப் பேசி சிரிக்கிறோம். அவருடைய அந்த பிரசித்தமான சிலுவை வரையும் சைகையை நான் வீட்டில் பண்ணிக் காட்டினால் அது ஆபாசமாக அன்றி வேடிக்கையாக மாறி விடுகிறது. இதற்கு முன் எந்த அரசியல் தலைவர் நமக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கி இருக்கிறார்? வடிவேலுவுக்கு அடுத்தபடியாக பல முத்திரைகள், பாவங்கள் காட்டி நம் பொழுதுகளை ஜாலியாக்கிய பெருமை ராகவனையே சாரும். இப்போதெல்லாம் மனம் சோர்ந்தால் ஒன்று வடிவேலு அல்லது ராகவனின் வீடியோ தான்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், அடுத்தடுத்து முருகன் உள்ளிட்ட பிற பாஜக தலைவர்களின் காணொலிகளையும் வெளியிட்டு விடுங்கள் எனக் கோரத் தான். அவர்கள் மீது தமிழர்களுக்கு உள்ள வெறுப்பைப் போக்கி, உச்சுக்கொட்ட வைக்க ஒரே வழி ஒவ்வொருவரையாய் எக்ஸ்போஸ் பண்ணி பதவியை விட்டுத் தூக்குவது தான். அதனால் தான் அண்ணன் அண்ணாமலையிடம் வேண்டுகிறேன், “உங்கள் ஸ்டிங்க் ஆபரேஷன்ஸ் தொடருங்கள். பாஜகவை காப்பாற்ற ஒரே வழி அது தான்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...