முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராம் எனும் தனித்துவமான இயக்குநர்


தமிழில் நல்ல திரைமொழி வாய்க்கப்பட்டவர்களும் பணத்துக்காக பக்காவான வணிக சினிமா எடுக்க கிளம்பினார்கள். கலைப்படமாக தெரியும் நடுநிலை சினிமா எடுக்கிறவர்கள் கொரியர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய சினிமாவின் ஹார்ட் டிரைவையே பின்வாசல் வழியாக புகுந்து மொத்தமாக உருவி எடுத்து தம் பெயரை போட்டு படமெடுத்துக் கொண்டதும் நடந்தது. இவர்களிடையே தன் சொந்த கதையை, சொந்தமான கருத்துக்களை, பிரச்சனைகளை தனித்துவமான மொழியில் எடுக்கிற இயக்குநர்களில் ஒருவர் ராம்.


 ராமின் சினிமா பார்வையாளர்களுக்கு திரைக்கும் இடையிலான கண்ணாடியை உடைப்பது. அனேகமாக, ஜெர்மனிய இயக்குநர் பிரெக்ட் நாடக மேடையில் முயன்றதை ராம் சினிமா திரையில் செய்து பார்த்தார் எனலாம். ஒரு சின்ன காதல் கதையை, அப்பா-மகள் உறவு குறித்த கதையை நாம் பொருளாதாரம், அரசியல், அறம், இயற்கை ஆகிய


பிரச்சனைகளைக் கடந்து யோசிக்க முடியாது, இவையே பின்னிருந்து நுண்ணிய இயக்கமாக நம் வாழ்வை நடத்துகின்றன என விவாதித்தவர் அவர். படத்தைப் பார்க்கும் போதே ரசித்தால் மட்டும் போதாது, பிரச்சனைகளைப் பற்றி பார்வையாளர்கள் தொடர்ந்து யோசித்தும், பேசியும் வர வேண்டும், அதுவே பரந்துபட்ட பார்வையாள அனுபவம் என பார்வையாள அனுபவத்தை மறுகட்டமைத்தவர், அதில் வெற்றியும் பெற்றவர். 

 ராம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சொத்து. அவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற வைப்பதும், அவரைப் போன்ற கலைஞர்களை பாதுகாப்பதும் நம் பொறுப்பு.  


ராமுக்கு மூன்று நாட்கள் பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

  எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம். எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வ...