முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த காலத்தில் வசனத் திருட்டு




தமிழ் சினிமாவில் எழுத்தாளனை வசனம் எழுத வைத்து கிரெடிட் கொடுக்காமல் ஏமாற்றி விடுவார்கள் என சொல்வார்கள். இவ்விசயத்தில் 74 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 21. தன் தாய்மாமன் சி.எஸ் ஜெயராமனின் சிபாரிசில் எம்.ஜி.ஆர் நாயகனாக முதன்முதலாக நடித்த ஒரு படத்தில் முதன்முதலாக வசனம் எழுத  வாய்ப்பு பெற்றிருந்தார். அவர் எழுதிய கூர்மையான வசனங்கள் அப்போதே கவனம் பெற்றன:

 "நான் எட்டாத பழம்


ஓஹோ வெட்டும் கத்தி நான்.


வைரக் கத்தியாக இருக்கலாம். அதற்காக வயிற்றில் யாரும் குத்திக் கொள்ள மாட்டார்கள்."


இந்த வசனங்களை தான் எழுதியதாக டைட்டில் கார்டில் போட்டுக் கொண்டு ஏமாற்றியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி. இதை அடுத்து எம்.ஜி.ஆரின் அடுத்த படமான "அபிமன்யு" எனும் படத்திலும் கலைஞர் அதே நபரால் கிரெடிட் தரப்படாமல் ஏமாற்றப்பட அவர் ஒரேயடியாக அப்போதைக்கு திரைத்துறைக்கு முழுக்குப் போட்டார்.


 அவர் பெயர்: கலைஞர் கருணாநிதி

படத்தின் தலைப்பு: ராஜகுமாரி

வெளியான ஆண்டு: 1947

தகவல்: "எம்.ஜி.ஆர்", பா. தீனதயாளன்

கருத்துகள்

raja இவ்வாறு கூறியுள்ளார்…
பல விஷயங்களில் தெரியாமல் முக்கியமாக தவறாக எழுதாதீர்கள்.
https://antrukandamugam.wordpress.com/2016/12/25/a-s-a-samy-storyscreenplay-writerdirector/
மு.கருணாநிதி என்ற 22 வயது இளைஞர் – அன்றைய பிரபல கர்நாடக சங்கீதம் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகராகவும், இசை அமைப்பாளராகவும் புகழ் பெற்றிருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த சி.எஸ்.ஜெயராமனின் அறிமுகப் பரிந்துரையின் பேரில் ஈரோட்டை விட்டு கோயம்புத்தூர் வந்து ஜூபிடரில் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அதுவரையில் நாடக ஆசிரியராக மட்டுமே இருந்தவர் சாமி மூலமாக சினிமாவிற்கு கதை வசனம் எழுதக் கற்றுக்கொண்டு, முதன் முதலாக அவருடைய ‘ராஜகுமாரி’ படத்திற்கு வசனம் எழுதலானார்.

பின்நாளில் மு.கருணாநிதியின் சினிமா 50-வது ஆண்டின் பொன்விழாவை நடிகர் விஜயகாந்த் சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கத்தில் நிகழ்த்திக் கொண்டாடிய தருணத்தில் மு.கருணாநிதி பேசும்பொழுது, ‘சினிமாவிற்கு கதை வசனம் எழுத அண்ணன் ஏ.எஸ்.ஏ.சாமியிடம்தான் நான் கற்றுத் தேர்ந்தேன்’ என்று கூறியதுடன்கூட, அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆனதும் திரைப்படக் கல்லூரியில் ‘ஸ்கிரிப்ட் – டைரக்ஷன்’ துறைக்கு அவரை ‘பிரின்ஸிபல்’ ஆக்கி மாத ஊதியம் பெறச்செய்தது மட்டும் அல்லாது, சாமி பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, நடக்க இயலாத நிலையில் இருந்தபொழுது ‘முரசொலி அறக்கட்டளை’ மூலமாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி தனது ஆசானுக்குச் சிறப்புச் செய்த அன்று, சாமி சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மேடைக்கு வந்து அந்த நன்றித் தொகையினைப் பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...