முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி20 உலகக்கோப்பை: அநீதியான ஆட்டச்சூழலும் அதை எதிர்கொள்ளும் வழியும்



ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் பனிப்பொழிவும்ஆடுதளங்களின்வினோதமான பண்பும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றனஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஹிந்துகுவிண்ட்டெக்கன்கிரானிக்கல் என பல நாளிதழ்களில்இணையதளங்களீல் இது குறித்த கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளனஇதுவரையிலான 14 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் மட்டுமே முதலில் மட்டையாடிய அணி வென்றுள்ளதுஎன்பதே விமர்சகர்கள் சுட்டிக் காட்டும் பிரச்சனை (அதாவது 2 நவம்பர் வரை)இலங்கை-இங்கிலாந்து போட்டி நடைபெற்ற போது தமிழ்வர்ணனையில் அபினவ் முகுந்த் முதலில் மட்டையாடுகிற அணியும் இரண்டாவதாக மட்டையாடுகிற அணியும்எதிர்கொள்ளுகிற முற்றிலும் மாறுபட்ட சூழல்களைஅதனால் முதலில் பந்து வீசுகிற அணிக்கு கிடைக்கிறஅதிகமான அனுகூலங்களைப் பற்றி விவாதித்தார்ஆக இது இப்போது எல்லா தளங்களிலும் கவனம் பெற்றுவரும்ஆட்டத்தின் தரத்தை பெரிதும் பாதிக்கிற ஏற்றத்தாழ்வான நிலையாக இருக்கிறது.

 இது என்ன பெரிய பிரச்சனையா என்று சிலருக்குத் தோன்றலாம்ஆனால் மாலையில் நடக்கும் போட்டிகளைக்கண்டாலே சில மணிநேரங்களில் சூழல் அடியோடு மாறுவதன் தாக்கத்தை உணர முடியும்அமீரக ஆடுதளங்கள்பொதுவாகவே மெத்தனமாக உள்ளவைஇவற்றை வேகப்படுத்த அதிகமாக நீரைத் தெளிக்கிறார்கள் களஅமைப்பாளர்கள்அங்கு வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருப்பதால் நீரின் அளவும் ஆடுதளம் காயவிடப்படும் கால அளவும் துல்லியமாக இராவிடில் ஆடுதளத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு விடும்இப்போதுநடந்துள்ளதைப் போலகுறைவாக காய்ந்து விட்டாலோ ஆடுதளத்தின் மேற்பகுதி மட்டும் உலர்வாகவும்கீழடுக்குகள் லேசான ஈரத்துடன்சரியாக இறுகாமலும் இருக்கும்விளைவாக இத்தகைய ஆடுதளங்களில்பந்து நின்று வரும்பவுன்ஸ் ஒன்று குறைவாக இருக்கும்அல்லது மெதுவாக துள்ளி வரும் பவுன்சாக இருக்கும்இதனால் முதலில் மட்டையாடுகிற அணிக்கு பந்தை டைம் செய்வது சிரமமாக இருக்கிறதுஎதிரணி நேராகநல்ல நீளத்தில் தொடர்ந்து வீசினால் ரன்களே வராமல் மட்டையாட்ட அணிக்கு நெருக்கடி அதிகமாகிவிக்கெட்டுகள் தாமே விழும்அல்லது இந்தியா-பாகிஸ்தான்இந்தியா-நியுசிலாந்த் போட்டிகளில் நடந்ததுபோல முதலில் பந்து வீசும் அணிக்கு ஓரளவுக்கு தாமதமான ஸ்விங் (late swing) கிடைக்கும்ஒரு பக்கம் மட்டைக்கு வராத பந்துஇன்னொரு பக்கம் தாமதமான ஸ்விங்தடுத்தாடியே ஆக வேண்டும் எனும் அழுத்தம்மட்டையாளர்களுக்கு ஏற்படும்இதுவே இரண்டாவதாக மட்டையாட ஒரு அணி வரும் போதோஒளிவிளக்குகளின் வெளிச்சத்தினாலோ பனிப்பொழிவினாலோ ஆடுதளம் சட்டென வேகமெடுத்து விடுகிறதுஸ்விங்கும் மறைகிறதுமுழுக்க மட்டையாட்டத்துக்கு சாதகமாகிறதுவிளைவாக இரண்டாவதாக மட்டையாடும் அணியால் 140-150 போன்ற  இலக்குகளை விரட்டி செல்வது சுலபமாகிறது.


ஆடுதளங்கள் இப்படி “விண்ணைத் தாண்டி வருகிறேன்” திரிஷா போல கணிக்க முடியாதபடி ஆகிப் போனதன்ஒரு காரணம் ஆடுதள அமைப்பாளர்கள் இவை ரொம்ப வெயிலில் காய்ந்து வெடித்துப் போய் சுழலுக்குசாதகமாகி விடக் கூடாது என அச்சப்படுவதேஆனால் அவ்வாறு சுழலும் ஆடுதளங்களை அவர்கள்அமைத்திருந்தால் கூட இதை விட சுவாரஸ்யமான ஆட்டங்கள் நிகழ்ந்திருக்கும் என்று சொல்லியாக வேண்டும்அதாவது இரவு 9:30 மணிக்கு பனிப்பொழிவு துவங்கினாலும் இளகின தன்மையில் உள்ளவெடிப்புகள்அதிகமாக கொண்ட ஒரு ஆடுதளத்தில் சுழலர்களால் முதல் பத்து ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளையாவதுவீழ்த்தி ஆட்டத்தை சமநிலையில் வைக்க முடியும்கடைசி பத்து ஓவர்களில் மட்டையாட்ட அணியால்மீள்வருகை நிகழ்த்தும்படியாக பனிப்பொழிவு அதிகமானால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்மாகும்ஆனால் பந்துசுழலக் கூடாதே எனும் ஆடுதள தயாரிப்பாளர்களின் பரிதவிப்பும்அச்சமும் இந்த ஆட்டங்களை டாஸைவெல்லும் அணிக்கு சாதகமாகஒருதலைபட்சமாக மாற்றி விட்டன.


இதை சொல்லுகிற அதே நேரம்என்னதான ஆட்டச்சூழல் முதலில் பந்து வீசுகிற அணிக்கு சாதகமாகஇருந்தாலும் ஆடுகிற அணிகளின் திறமைகவனம்திட்டமிடல் ஆகியவையும் வெற்றியை தீர்மானிக்கிறசங்கதிகளாக இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்நவம்பர் ஒன்றாம் தேதி நடந்த இலங்கை-இங்கிலாந்து போட்டி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்இப்போட்டியில் இங்கிலாந்து டாஸை இழந்து முதலில்மட்டையாடியதுமுதல் ஆறு ஓவர்களில் ரன்களை சரளமாக அடிக்க அது திணறியதுமூன்றுவிக்கெட்டுகளையும் பறிகொடுத்ததுஆனால் அதன் பிறகு துவக்க மட்டையாளர் ஜோஸ் பட்லரும்அணித்தலைவர் மோர்கனுமாக ஒரு நிதானமான கூட்டணியை உருவாக்கி 13 ஓவர்கள் ஆடினர். 112 ஓட்டங்களை அவர்களுடைய கூட்டணி சேர்த்ததுபட்லர் சரியான நேரத்தில் அடித்தாடத் துவங்கி 130க்கு முடியவேண்டிய இன்னிங்ஸை 163 வரை கொண்டு சென்றார்அவர் 67 பந்துகளில் அடித்த 101 உலக கிரிக்கெட்டில்டி20 போட்டிகளில் ஆடப்பட்ட தலைசிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று.

 இதைச் சொல்லுகிற அதே நேரம் இந்த போட்டியில் இலங்கை பந்து வீசும் போதே ஆச்சரியமாக முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு சிறிது பனிப்பொழிவு தலைகாட்டத் தொடங்கியது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்அத்தோடு இலங்கையின் வேகவீச்சாளர்களுக்கு கட்டுப்பாடோ நிதானமோ இல்லாமல் போக அவர்களுடையகுழப்பத்தையும் தடுமாற்றத்தையும் பட்லர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்இங்கிலாந்து பந்து வீச வந்தபோதும் பனிப்பொழிவு இருந்ததுஆனால் அவர்கள் சரியான நீளத்தில் திசையில் தொடர்ந்து வீசி பனிப்பொழிவுஅதன் உச்சத்தை எட்டும் இரவு பத்தரை மணிக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர்அதன் பிறகுஇலங்கையின் அணித்தலைவர் ஷனகாவும்ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் ஒரு சமயோஜிதமான கூட்டணியைஅமைத்த போது  இலக்கு அவர்களுக்கு எட்டும் தொலைவிலே இருந்ததுபந்தும் வேகமாக மட்டைக்கு வரசிக்ஸர் அடிப்பது சுலபமாக இருந்ததுஇவர்களைப் போல இலங்கையின் முதல் நான்கு மட்டையாளர்களும்ஆடியிருந்தால் இப்போட்டியை இலங்கை சுலபத்தில் வென்றிருக்க முடியும்ஆனால் வெல்ல வேண்டியநிலையில் இருந்து 137க்கு ஆல் அவுட் ஆகியது இலங்கை.


ஆக இலங்கை-இங்கிலாந்து போட்டி ஒன்றைக் காட்டுகிறது - என்னதான் ஆட்டச்சூழல் இரண்டாவதாகமட்டையாடுகிற அணிக்கு சாதகமாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் மூன்றுஎண்களுக்குள் ஆடும் மட்டையாளர்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக நீடித்தாட வேண்டும்குறைந்தது ஒருஅரை சதமாவது அடித்து ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும்சில நேரம் தேர்வுகளின் போது கண்காணிக்கவரும் ஆசிரியர்கள் காப்பி அடிக்க விட்டு விடுவார்கள்மாணவர்கள் பிட்டுகளை வெளியே எடுப்பார்கள்ஆனால்எந்த கேள்விக்கு எந்த விடை என்று தெரியாமல் திணறுவார்கள்விளைவாக என்னதான் வாய்ப்பளித்தாலும்அதை பயன்படுத்தி தேர்வடையவோ நல்ல மதிப்பெண் பெற முடியாமல் போய் விடும்சாதகமான சூழலிலும்சொதப்பிய இலங்கையின் ஆட்டம் இதையே எனக்கு நினைவுபடுத்தியதுஅதே நேரம்இங்கிலாந்தின்அணுகுறையில் இருந்து இந்தியாவைப் போன்ற மற்ற அணிகள் கற்றுக் கொள்ள ஒரு முக்கிய பாடம் உள்ளது.


என்னதான் டாஸை இழந்தாலும் முடிந்தளவுக்கு போராடினால்நிதானமாக சமயோஜிதமாக ஆடி 150க்கு மேல்ஒரு இலக்கை அமைத்தால் அடுத்து பந்து வீசும் போது பனிப்பொழிவு இருந்தாலும்சரியான நீளத்தில்திசையில் தொடர்ந்து வீசி நெருக்கடியை ஏற்படுத்த முடியும்எதிரணி தவறுகள் செய்யும் பட்சத்தில்விக்கெட்டுகளும் கொத்தாக விழும்சிறப்பான களத்தடுப்பும் அவசியம்டாஸை இழந்ததும் தலையில்கைவைத்து உட்கார வேண்டியதில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...