முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹர்ஷல் பட்டேல் எனும் டி20 நிபுணர்


ஹர்ஷல் பட்டேல் இன்று தன் முதல் போட்டியில் எவ்வளவு பிரமாதமாக வீசினார். எந்த பதற்றத்தையும் அவர் காட்டவில்லை. பெங்களூருக்காக ஐ.பி.எல்லில் இந்த பருவத்தில் வீசியதைப் போன்றே வீசினார் - துல்லியமான திசை மற்றும் நீளம், ஏகப்பட்ட மெதுபந்துகள், ஒவ்வொன்றும் 110,  115, 125 கி.மீ வேகங்களில். ஒன்றிரண்டு பந்துகளை வெரைட்டிக்காக 130இல் வீசினார். நீளத்திலும் திசையிலும் கூட ஒரு மாறுபட்ட தன்மையை ஒவ்வொரு பந்துக்கும் கொண்டு வருகிறார். நான்காவது குச்சிக்கு வெளியே இரண்டு மெதுபந்துகள் முழுநீளத்தில் என்றால், அடுத்து ஒரு பந்தை அதே நீளத்தில் சற்று வேகமாக உள்ளே கொண்டு வருகிறார். அடுத்து மீண்டும் மெதுபந்துகள் இரண்டு சற்று பின்னால் நல்ல நீளத்தில் (good length). இறுதிப் பந்து மீண்டும் சற்று வெளியே முழுநீளத்தில் மெதுவாக. இப்படி ஒரு பாணியை அனேகமாக எல்லா போட்டிகளிலும் பின்பற்றுகிறார். அவருக்கு நினைக்கிற இடத்தில் வீச முடிகிற கட்டுப்பாடு உள்ளது - இலங்கையின் முன்னாள் மிதவேக ஸ்விங் வீச்சாளர் சமிந்தா வாஸைப் போல. சுலபமாக லட்டு பந்துகளை மட்டையாளருக்கு தூக்கிக் கொடுக்க மாட்டார்.

 சில மிதவேக வீச்சாளர்கள் - பிராவோ கூட - பவர் பிளேவில் வேகமாக வீசி அடிவாங்கி விட்டு ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் மட்டும் மெதுபந்துகளை வீசுவார்கள். ஆனால் ஹர்ஷல் பட்டேலோ முதல் ஓவரில் இருந்தே மெதுபந்துகளை வடை மாஸ்டர் உருட்டி உருட்டி பதமாக எண்ணெயில் விடுவது போல போடத் தொடங்கி விடுவார். இது தான் என்னுடைய வலிமை, எப்போது கேட்டாலும் இவ்வாறே வீசுவேன் எனும் தெளிவு அவருக்கு உள்ளது. ஒன்றிரண்டு பவுண்டரிகள் கொடுத்தாலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக நிலைமையை கையாள்கிறார். 

இவ்வளவு சிறப்பான ஒரு டி20 நிபுணரை எப்படி உலகக்கோப்பை அணியில் எடுக்காமல் விட்டார்கள்? வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றில் ஜூனியர் வக்கீல்கள் ஜாமீனைத் தேடி மீன் சந்தைக்கு போனதைப் போல நம் தேர்வாளர்கள் டி20க்கு பந்து வீச்சாளர்களை கொண்டு வரோம் என்று டெஸ்ட் வீச்சாளர்களாக கொண்டு வந்து நம்மை தலையை கம்பியில் முட்ட வைத்தார்கள். யோவ் சேத்தன் ஷர்மா இனியாவது பார்த்து கத்துக்கோயா. வாளை மீன் இருக்குங்கிறாங்க, வெலமீன் இருக்குங்கிறாங்க என்று திரும்பவும் ஆரம்பிச்சிராதீங்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...