முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கீட்டோ உணவுமுறை - சவால்கள்

 




கடந்த மூன்று நாட்களாக கீட்டோ உணவுமுறையைப் பின்பற்றுகிறேன். 2 வாரங்களில் இருந்து 4 வாரங்கள் வரை பின்பற்றி விட்டு பழையபடி portion controlக்கு செல்ல உத்தேசம். இதற்கு முன்பு நான் சுமார் ஒரு ஆண்டுக்கு ஒரு குத்துமதிப்பான பேலியோவைப் பின்பற்றியதுண்டு - அதாவது அதை பேலியோ என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அந்த காலத்தில் நான் பழம், சிக்கன், முட்டை, பால், கொஞ்சம் பாதாம் சாப்பிடுவேன். தானியங்கள், பருப்புகளை தவிர்ப்பேன். அந்த அரைகுறை பேலியோவிலேயே எனக்கு மூன்று கிலோவுக்கு மேல் எடை குறைந்தது. ஆனால் இந்த முறை துல்லியமாக, எந்த சமரசமும் இன்றி கீட்டோவைப் பின்பற்ற முடிவெடுத்தேன்


முதல் சவால் மாவுச்சத்து 20 கிராமுக்குக் குறைவாக ஒரு முழுநாள் உணவில் இருக்க வேண்டும் என்பது. இது மிக மிக சிரமம். மாவுச்சத்துள்ள தானியங்கள், பருப்புகள் எவையும் கூடாது. பால், பழம் கூடாது. சரி போகட்டும், நீங்கள் காய்கறி, பாதாம் போன்ற உணவுகளை சாப்பிடால் என நினைத்தாலும் மாவுச்சத்து கட்டுப்பாட்டைக் கடந்து கூரை மீதேறி ஓடி விடும். சிக்கன், மாட்டுக்கறி போன்றவற்றையும் வெங்காயம், தக்காளி சேர்த்து மசாலாவாக பண்ணி சாப்பிட்டாலும் மாவுச்சத்து கூடும். ஐந்து வேளை உணவில் ஒவ்வொரு வேளையும் 3-4 கிராமுக்குள் மாவுச்சத்தை கட்டுப்படுத்தினாலே நாள் முடிவில் 20 கிராமுக்குள் கொண்டு வர முடியும்


இதற்கு சிறந்த வழிகள் அடுத்த நாள் உணவை முன்கூட்டியே திட்டமிடுவது, கொழுப்புச் சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுவது (அது மட்டும் தான் மாவுச்சத்தை தவிர்க்க உதவுவது.). ஒரு நாளைக்கு நான் 1500 கலோரிகள் உண்கிறேன் என்றால் அதில் 125 கிராமுக்கு மேல் கொழுப்பும், 60-70 கிராமுக்குள் புரோட்டீனும் இருக்கலாம். புரோட்டீனை இன்னும் குறைத்து கொழுப்பை மேலும் அதிகப்படுத்தவும் செய்யலாம். நான் காலை உணவில் இருந்து மாலை நொறுக்குத் தீனி வரை அதிகமாக கொழுப்பைக் உட்கொண்டு அதுவரையிலான மாவுச்சத்து 10க்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். அப்போது தான் இரவுணவில் கொஞ்சம் அதிகமாக மாவுச்சத்து இருந்தாலும் கட்டுக்குள் இருக்கும். தரப்பட்ட 20 கிராம் மாவுச்சத்தைத் தாண்டி ஒரு கிராம் கூடுதலாக உட்கொண்டால் கூட கீட்டோஸில் எனும் உடம்பின் கொழுப்பு எரிக்கப்படும் நிலை வராது என்கிறார்கள்.


வழக்கமாக கீட்டோவில் கேஸ் பிரச்சனை வரும். சிலர் வயிற்று வலி காரணமாகவே விட்டு விடுவார்கள். மற்றொரு பிரச்சனை மலச்சிக்கல். அதிர்ஷ்டவசமாக எனக்கு இரண்டும் வரவில்லை. மலப்பிரச்சனையை கருத்திற் கொண்டு நான் Isabgol எனும் நார்ச்சத்து பொடியை எடுத்துக் கொண்டேன். அதனால் காலைக்கடனை சரளமாக கழிக்க முடிந்தது.


தாகமும் சிறுநீர் கழித்தலும் மற்றொரு தொந்தரவு. மூன்று நான்கு லிட்டர்கள் தண்ணீர் சாதாரண்மாகவே உள்ளே போகிறது. அடிக்கடி பாத்ரூம் போய் போய் அலுக்கிறது. ஆனால் உடம்பில் உள்ள கிளைகோஜென் எனும் மாவுச் சத்து இருப்புத்தொகை செலவிடப்படுகிறது, மாவுச்சத்து நீருடன் இணைந்து இருக்கிற வஸ்து என்பதால் மாவுச்சத்து எரிக்கப்பட நீரும் சிறுநீராக வெளியேறும் என இணையத்தில் படித்தேன். உடம்பில் சேமிக்கப்பட்ட மாவுச்சத்து காலியானதும் உடம்பு கொழுப்பை எரிக்கத் தொடங்கும் - அதாவது கீட்டோஸிஸ் நடக்கும். அதனால் இந்த நீரதிகாரம் ஒரு நல்ல அறிகுறியே.

 

 கீட்டோஸிஸ் தான் எடை குறைப்புக்கு பிரதான காரணி. வரும் ஞாயிறுடன் ஐந்தாவது நாள் நிறைவாகும். அன்று என் மூத்திரத்தில் கீட்டோன் டெஸ்ட் ஸ்ரிப்பை பயன்படுத்தி சோதிக்கையில் அதில் கீட்டோன்கள் இருப்பதாகத் தெரிந்தால் கீட்டோ உணவு முறை வெற்றி எனப் பொருள்


நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...