சூரியன் எப்படி உதித்தென சொல்லுகிறேன் உன்னிடம் -
ஒவ்வொரு தடவையும் ஒரு வண்ண நாடா.
செவ்வந்திற் கற்களில் மிதந்தன தேவாலய கூர் கோபுரங்கள்.
குன்றுகள் தம் தலைக்கவிகைகளை அவிழ்த்தன
போபோலிங் பறவைகள் ஆரம்பித்தன.
அப்போது நான் என்னிடம் மெதுவாக சொன்னேன்,
“அது சூரியனாக இருக்க வேண்டும்!”
****
ஆனால் அது அஸ்தமித்தது எப்படி, நான் அறியேன்.
மஞ்சள் பையன்களும் சிறுமியரும்
நாள் முழுக்க ஏறிக் கொண்டிருந்த
ஒரு செவ்வூதா தடுப்புப் படிக்கட்டிருந்தது அங்கே
அவர்கள் ஏறி மறுபக்கம் கடக்கும் வரை,
அதன் பின்னொரு சாம்பல் நிற அங்கியில் பாதிரி
மாலை நேர குறுக்குக் கம்பிகளை மூடிவிட்டு
மந்தையை ஓட்டி சென்றார்.
- எமிலி டிக்கின்ஸன்
தமிழில் ஆர். அபிலாஷ்

Comments