குழந்தைகள் விருந்தினருக்கு நல்லிரவு சொல்லி
தயக்கமாகத் திரும்பிட
என் பூக்கள் தம் எழிலான உதடுகளை உயர்த்தும்,
பின் தமது இரவு மேலங்கிகளை அணியும்.
கண்மலர்ந்ததும் காலை விடிந்த பேருவகையில்
குழந்தைகள் ஆடித் திரிந்திட
என் பூக்கள் தம் நூறு தொட்டில்களில் இருந்து
எட்டிப் பார்த்து மீண்டும் துள்ளிக் குதிக்கும்.
- எமிலி டிக்கின்ஸன்
தமிழில் ஆர். அபிலாஷ்

Comments