முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரோஹித் ஷர்மா - அவநம்பிக்கை நாயகன்


இன்றைய ஆட்டத்தில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து ஆணி இந்த 350க்கு பக்கத்தில் வருவது ஒரு அசாதாரண முயற்சி. வாழ்த்துகள்.

 அதே நேரத்தில், நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியா கிட்டத்தட்ட தோற்கும் நிலைக்கு சரிந்து பின்னர் மயிரிழையில் தப்பிக்க காரணம் என்ன?  

முதல் முக்கியமான காரணம்  மோசமான பந்துவீச்சாளர்களின் தேர்வே - குறிப்பாக நல்ல ஆட்ட நிலையில் இருந்த உம்ரான் மாலிக்கை நீக்கி அந்த இடத்தில் மட்டையாட்டத்தை காரணம் காட்டி ஷர்துல் தாகூரை உள்ளே கொண்டு வந்தது.
எதற்கு உம்ரான் மாலிக்கின் இடத்தில் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்? ஏனென்றால் அக்ஸர் பட்டேல் தன் உறவினரின் திருமணத்துக்காக விடுப்பெடுக்க, ராகுலும் அதே போல ஒரு காரணத்துக்காக விடுப்பெடுக்க, ஷ்ரேயாஸ் காயம் காரணமாக வெளியேற மத்திய வரிசை சற்று அனுபவம் குறைந்ததாகிறது. உடனே ரோஹித் பதற்றமாகி மட்டையாட்டத்தை பலமாக்க ஒரு பவுலரை நீக்கி தாகூரை கொண்டு வருகிறார். பிரச்சினை என்னவென்றால் எட்டாவது எண்ணில் வருகிற ஆல்ரவுண்டர் ஒரு ஜடேஜா, பிரேஸ்வெல் போன்றவர் என்றால் அது நியாயமான தேர்வு, ஆனால் தாகூர்? 

இதே போலத்தான் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பு ஜடேஜா காயம்பட ரோஹித் பதற்றத்தில் குழம்பி பந்து வீச்சு வரிசையை மாற்றி பலவீனமான பந்துவீச்சாளர்களைக் கொண்டு வந்து அணியின் சேர்க்கையை குழப்பினார். ஒவ்வொரு முறையும் இது நடக்கிறது - ரோஹித் போதுமான அளவுக்கு தன் மட்டையாளர்களை நம்பிவதில்லை. 

இதே காரணத்தினால் தான் ரோஹித் டாஸ் வென்றும் இரண்டாவது மட்டையாடி பனியின் தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் முதலில் மட்டையாடினார். ஏனென்றால் இரண்டாவதாக மட்டையாடுவத்ற்கான மத்திய வரிசை தன் வசம் இல்லை என நினைக்கிறார்.
இதனாலே பனியின் தாக்கம் காரணமாக நிறைய புல் டாஸ்கள் விழுந்தன, பந்து இன்னும் வேகமாக வந்தது, பெரிய ஷாட் அடிப்பது சுலபமாகியது. அதாவது தனது மத்திய வரிசை மீதுள்ள அவநம்பிக்கையால் ரோஹித் தன் பந்து வீச்சாளர்களை பலி கொடுத்தார்.

கடைசிக் காரணம் 6 விக்கெட்டுகள் விழுந்ததும் நாம் அப்படா என இளைப்பாறியது. அவர்கள் தரப்பில் இருந்து பவுண்டரிகள் வீளாசிய போது கூட நாம் விழித்துக் கொள்ளவில்லை - மிஸ் பீல்ட் பண்ணி பவுண்டரிகள் கொடுத்தோம். அவர்கள் 100 பார்னர்ஷிப் எடுத்த பின்னரே நமக்கு நிஜம் உறைத்தது! இந்த பிரச்சினை ஏற்கனவே நமக்குள்ளது தான் - நாம் 6 விக்கெட்டுகளுக்குப் பிறகு எதிரணியை நசுக்க முயல்வதில்லை, அதற்கான பந்து வீச்சாளார்களும் இம்முறை நம்மிடம் இல்லை. இதற்கும் தீர்வு உம்ரான் / பிரசீத் கிருஷ்ணா ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு வருவதும், ஹர்த்திக் பாண்டியா முழுமையான ஆட்டத்தகுதியுடன் பந்து வீசுவது (இப்போது அவருக்கு முதுகுக் காயம் உள்ளது.)

ஒரு சாதாரண பை லேட்டரல் போட்டியிலே தனது தோல்வி பயத்தை, பதற்றத்தை கட்டுப்படுத்த தெரியாத ரோஹித் வரப் போகும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் என்னவெல்லாம் செய்து சொதப்புவார்?  இந்த விசயத்தில் நிச்சயமாக இந்திய வரலாற்றிலே சுத்த புள்ளபூச்சி கேப்டன் ரோஹித் ஷர்மா தான். ஐ.பி.எல் கோப்பைகளைப் பார்த்து நாமும் தேர்வாளர்களும் ஏமாந்து போனோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...