"வணக்கம் அபிலாஷ்.
குடும்பநல அமைப்பு பற்றி நீங்கள் தொடர்ந்து பதிவிடுவது பெரியார் செய்ததற்கு எள்ளளவிலும் குறைந்ததல்ல. நீங்கள் குறிப்பிடும் பெண்கள் உத்தேசமாக 90 களுக்கு பிந்தைய வருடங்களில் பிறந்தவர்களாகவே இருக்க வாய்ப்பு அதிகம் என்பதையும் அறிவேன். ஏனெனில் நான் குடும்ப அமைப்பில் வெற்றி பெற்றிருந்தாலும் என் உடன் பிறந்தவர்கள், சுற்றியுள்ளவர்களை காண்கையில், குடும்ப அமைப்பிற்குள் நுழையும் பெண்கள் பெரும்பாலும் மேலாளர்-குமாஸ்தா உறவுமுறையையே பேணுவதாகத் தோன்றும். பெரும்பாலும் பெண்களில் தன்னைப்பற்றி, தன்னைச்சார்ந்து மட்டுமே யோசிக்கும் தற்குறிகள் வாழ் காலம் இது. இப்போதைய நவீன, படித்த ஓரளவு பகுத்தறியும் நிலையில் உள்ள காலத்திலேயே உங்களுக்கு இவ்வளவு எதிர்வினைகள் வருகிறதென்றால் பெரியாருக்கு எவ்வளவு வந்திருக்கும் என்று யோசித்தாலே மலைப்பாக இருக்கிறது. யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டும் போது எழும் அதிர்ச்சி அது. தன்னை விமர்சிக்கும் போது/ தன்னைப் பற்றிய தான் அறியாத உண்மையை எழுதும் போது ஏற்படும் பதட்டத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதே அதன் பொருள். என்றால் நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்றே பொருள். உங்களின் புனைவெழுத்துப் பணிகளுக்கிடையில் தொடர்ந்து எழுதுவது பாராட்டுக்குரியது. இதை ஒரு தனித் தொகுப்பாக கொண்டுவருவது குறித்து தீவிரமாக யோசியுங்கள். நன்றி."
- பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு நண்பர்
Comments