Skip to main content

"கோசலை" நாவல் குறித்து

 நான் பெரிதும் மதிக்கக்கூடிய இலக்கியவாதியும் எழுத்தாளருமான அபிலாஷ் சந்திரன் கோசலை நாவல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியதைக் கேட்டு முடித்ததும் பெரும் நெகிழ்வும், நிறைவும் ஏற்பட்டதற்குக் காரணம், இது ஒரு மாற்றுத்திறனாளியை மையப்படுத்தி எழுதிய நாவல் என்பதால் இதை வாசிக்கும் மாற்றுத்திறனாளி பார்வையில் என்னவாக இருக்கும் என்கிற மாபெரும் பயம் எழுதிய தினத்திலிருந்து இருந்தது.

ஓரிரு மாதங்களுக்கு முன் கோசலையைப் போன்ற உடற்சவால் கொண்ட ஒரு பெண், நாவல் பற்றிக் கேள்விப்பட்டு, அதை வாசித்து என்னை சந்தித்து அழுது அரவணைத்துச் சென்றார்.
அபிலாஷ் மாற்றுத்திறனாளி மட்டுமின்றி ஒரு இலக்கியவாதியாகவும் இருப்பதால் அதே அரவணைப்பு இன்னும் அழுத்தத்துடன் கிடைக்கிறது.🥰 🫂

Comments