முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளரின் 'விடம்'



மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏவை இன்று சந்தித்தேன்.
பெரிய பேச்சுப்பிரியர். சுவைபட பேசிக்கொண்டே இருக்கிறார். வற்றாத ஆற்றல். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் உரையாட நேரம் வாய்த்தபோது என்னுடைய சொந்த ஊர், பெங்களூரில் வேலை பார்க்க வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என விசாரித்தார். சொன்னேன். கூடுதலாக இந்த ஊரில் இருக்க வெளிநாட்டில் இருப்பதைப் போலிருக்கிறது, தமிழகத்தில் இருக்கிற ஒரு பண்பாட்டு உணர்வாற்றல், சக எழுத்தாளர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு தரும் தூண்டுதல்கள் தமிழ் பேசும் சூழலில் எழுத்தாளருக்குக் கிடைக்கும், அதீத உற்சாகம், ஊக்கம் பெங்களூரில் இல்லை என்றேன். அவர் அதற்கு தன் வாழ்வில் இருந்து ஒரு சுவையான உதாரணத்தை சொன்னார்.
அவர் மருத்துவராகப் பணியாற்றும் போது பாம்பின் விடத்தை பரிசோதிக்க ஆய்வகத்தில் பாம்புகளை வளர்த்திருக்கிறார்கள். அவற்றின் விடத்தை சோதித்த போது அவை வயலிலும் காட்டிலும் கிடைக்கும் பாம்பின் விடத்தில் இருந்து பல மடங்கு குறைவான வீரியத்துடன் இருப்பதாகத் தெரிய வந்ததாக சொன்னார். ஏனென்றால் இயற்கையில் இருக்கும் பாம்புகள் இயற்கையான உணவை வேட்டையாடிப் பெறும், அங்கு பல ஆபத்துகளை அனுதினமும் சந்திக்கும், ஆகையால் வீரியமான விடத்தைப் பெற்றிருக்கும். ஆய்வக பாம்புகள் கார்ப்பரேட் / வெளியூர் சூழலில் அந்நியப்பட்டு வாழும் மனிதர்களைப் போன்றவை. அவற்றுக்கு விடத்தின் அவசியம் இல்லை. 2017இல் நான் பெங்களூருக்குப் போகப் போவதாக சொன்ன போது 'ஒரு எழுத்தாளரின் படைப்பாற்றல் அகத்தில் இருந்து மட்டுமல்ல அவரது மரபுடனும் பேச்சுமொழி, பண்பாட்டு அசைவுகள் மற்றும் அரசியலுடனான சூழலுடனான நேரடித் தொடர்பில் இருந்து வருகிறது' என்று ஜெயமோகன் என்னிடம் சொன்னார். எனக்கு சட்டென்று அது நினைவுக்கு வந்தது. அதே நேரம் இந்த அந்நியப்பட்ட சூழலின் தனிமையே என்னை இன்னும் ஆவேசமாக அதிகமாக வாசிக்கவும் எழுதவும் வைத்தது.
ஒரு இனிய சுவாரஸ்யமன சந்திப்பு. நாளை மருத்துவர் எழிலன் எங்கள் பல்கலையில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்கிறார், பேசுகிறார். அதைக் கேட்கும் ஆவலில் இருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...