விஷ்ணுபுரம் விருது பெறும் யுவனுக்கு வாழ்த்துகள். அவரது "கடலில் எறிந்தவை" தொகுப்பின் சில கதைகளை அண்மையில் படிக்கையில் கதைக்குள் அவர் உருவாக்கும் வெவ்வேறு மடிப்புகளும் சின்னச்சின்ன உளவியல் விளையாட்டுகளும் வியப்பூட்டின. கடந்த பத்தாண்டுகளில் யுவன் இன்னும் கச்சிதமான 'விளையாட்டுத்தனமான' படைப்புகளை எழுத ஆரம்பித்துவிட்டார், ஒரு நவீன ஓவியத்தைப் போல கதைகளை உருவாக்குகிறார் என்று தோன்றுகிறது.
விருதுகள் அடிப்படையில் நாம் மகிழ்ந்திருக்கவும் பரஸ்பரம் உற்சாகமூட்டவும் தான். அவர் மகிழ்ந்திருக்கட்டும். மேலும் பல நாவல்களை, கதைகளை நமக்கு வழங்கட்டும்.
பின்குறிப்பு: இப்போது என்னுடைய பொருளாதார நிலையில் பயணம் செய்ய முடிவதில்லை. அடுத்த சில ஆண்டுகளில் மீண்ட பின்னர் இதைப் போன்ற இலக்கிய விழாக்களில் பங்குகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இப்போதைக்கு இந்த இயலாமையின் சாதகமான நேரத்தை பயன்படுத்தி நிறைய புனைவு எழுதப் போகிறேன். காலம் கனியும்.
Comments