இதை என்னால் நிச்சயமாக இதுவென்று சொல்லிவிட முடியாது. நான் சொல்ல சொல்ல அது மற்றொன்றாக மாறுவதை உணர்கிறேன், ஆனால் சுருங்க சொல்வதானால் பின்நவீன இலக்கியத்தை "எழுத்தாக", "தொழில்நுட்பமாக" காணாத, மாற்றாத, கதையில்லாமல் கதை சொல்வதை ஒரு அரசியலாக்கிய, அதைத் திட்டமிட்டு செய்யாத ஒரே படைப்பாளி இங்கு சாரு தான், அதனாலே அவரால் அந்த எழுத்தில் நீடிக்க இயல்கிறது. பின்நவீன எழுத்தை அவர் ஒரு ஆன்மீகமாக காண்கிறார், அதை அவர் அடைகிறார், அதுவாக இருக்கிறார். இது ஒரு ஒப்பற்ற சாதனை. வாசித்தும் பயின்றும் மட்டும் அடைய இயலாத ஒரு வித்தை.
சாருவுக்கு என் அன்பும் பிறந்த நாள் வாழ்த்துகளும்!
Comments