எங்கள் ஆங்கிலத்துறை நடத்தும் மெலாஞ்ச் ஒரு கருத்தரங்கிற்காக ஒரு பன்மொழித் தொகுப்பைக் கொண்டு வருகிறோம். புனைவு, கவிதை, தன்வரலாற்றுக் கட்டுரை என எல்லா வகையான படைப்புகளையும் அனுப்பலாம். தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளிலும் எழுதலாம். ஒரே நிபந்தனை - அது ரயில், ரயில் பயணத்தைப் பற்றி நேரடியாகவோ குறியீடு உருவகமாகவோ குறிப்பிட வேண்டும். ரயிலின் தடதடப்பு ஒலி கேட்க வேண்டும். இயன்றால் உங்கள் படைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சேர்த்து அனுப்பலாம், இரண்டையும் அருகருகே பிரசுரிப்போம். இல்லாவிட்டாலும் பிரசுரிப்போம். இரண்டு மாதங்களில் நூல் வெளியிடப்படும். ஆர்வமுள்ள நண்பர்கள் melangecreativeanthology@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு படைப்புகளை அனுப்பவும்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்