கேள்வி: அண்ணே, அன்றாட பணிக்கு மத்தியில் தினமும் எப்படி எழுத்தை கைகொள்கிறீர்கள்? சில நேரத்தில் எழுத அமர்ந்து ஏதேதோ எழுதுகிறேன். எழுதியதை மொத்தமாக அழித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன். சில நேரம் வாரத்தில் இரு நாள் மட்டுமே எழுதுகிறேன். அன்றாடம் எழுத தாங்கள் என்ன உத்தி செயல்படுத்துகிறீர் அண்ணா?
நான்: பழக்கமாகிவிட்டால் அது தானே நடக்கும். அதுவரை முயற்சி எடுக்க வேண்டும். திட்டமிட வேண்டும், இவ்வளவு நேரம் இன்றைக்கு என முடிவெடுத்து அதற்காக உட்கார வேண்டும். கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். இலக்கை அடைந்த பின்பே தூங்க செல்ல வேண்டும். தினமும் சிறுக சிறுக எழுதினால் நிறைய எழுதிக் குவிக்கலாம்.
கடைசியாக, மனத்தடை இருக்கலாகாது.
மனதின் மொழியில், பேச்சின் மொழியில் எழுத வேண்டும், இடைவெளியை முடிந்தவரைக்கும் குறைக்க வேண்டும்.
நாவல் வகுப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு உள்பெட்டிக்கோ 9790929153 எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்.
Comments