முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டு வண்டிக்குப் பதிலாக ரேஸ் கார்


தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் எடுத்துள்ள மாட்டு வண்டி அணியைக் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள்ளன. வேறு வழியில்லாமல் ரோஹித் ஷர்மாவும் அகார்க்கரும் ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த அணியைப் பற்றி என் பார்வையை தனியாக எழுதுகிறேன்.
கீழே வருவது டி20 உலகக் கோப்பைக்கான என்னுடைய 15 வீரர்கள் கொண்ட அணி:
ருதுராஜ் கெய்க்வாட்
ஜெய்ஸ்வால்
சூர்யகுமார் யாதவ் (தலைவர்)
ஷிவம் தூபெ
ரிங்கு சிங் (பினிஷர்)
ஹர்த்திக் பாண்டியா (ஆல் ரவுண்டர்)
ஜிதேஷ் ஷர்மா (கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா (ஆல் ரவுண்டர்)
குல்தீப் யாதவ்
சந்தீப் ஷர்மா
அர்ஷ்தீப் சிங்
நடராஜன்
பும்ரா
ரவி பிஷ்னோய்
அபிஷேக் ஷர்மா
ரிசர்வ் வீரர்கள்
நிதீஷ் குமார் ரெட்டி (ஆல் ரவுண்டர்)
ஷஷாங்க் சிங் (பினிஷர்)
அஷுதோஷ் ஷர்மா (கீப்பர்)
சாய் கிஷோர்
திலக் வர்மா / பராக் (மத்திய வரிசை - எண் 4 வீரர்)
என்னுடைய அணியில் 180-220 ஸ்டிரைக் ரேட்டில் ஆடும் இளம் மட்டையாளர்களே துவக்க வீரர்கள். 3, 4 எண்களில் வலது, இடது கை அதிரடி வீரர்கள். அதன் பிறகு மூன்று பினிஷர்கள் வருகிறார்கள். ஒருவேளை சீக்கிரமே விக்கெட்கள் விழுந்தால் ஜடேஜாவை சூர்யாவுடன் ஆட எண் 4க்கு அனுப்பலாம். அதே போல 5 விக்கெட்டுகள் விழுந்தாலும் அவரால் அணியின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி குறைவான ரன் ரேட்டில் சில ஓவர்கள் தாக்குப்பிடித்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியும். பந்து நின்று வராத பட்சத்தில் குல்தீப்பின் இடத்தில் ஒரு சந்தீப் ஷர்மா வருவார். எண் 7 வரை 20 ஓவர் போட்டிகளில் மட்டையாளர்கள் போதும் என்பது என் நம்பிக்கை. அதற்கு மேல் ஆல்ரவுண்டர்கள் வருவது அணியை பலவினப்படுத்துமே அன்றி வலுவாக்காது. அப்படியே ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் கூடுதலாக சுழலர் வேண்டுமெனில் அபிஷேக் ஷர்மாவை ரித்துராஜின் இடத்தில் எடுக்கலாம். பும்ரா, அர்ஷ்தீப், நடராஜன், ஹர்த்திக் பாண்டியா வேகவீச்சாளர்கள். ஹர்த்திக்கும் அர்ஷ்தீப்பும் பும்ராவும் துவக்க பந்துவீச்சாளர்கள். இடதுகை மட்டையாளர்கள் வரும் போது நடராஜன், அர்ஷ்தீப், பும்ரா ஆளுக்கு ஒரு ஓவர் வீசலாம். ஹர்த்திக்கும் வீசலாம். வலது கையாளர்களுக்கு ஜடேஜா. அபிஷேக்கை அணியில் வைத்திருப்பது ஒருவேளை ஹர்த்திக்குக்கு ஆட்டத்தின் நடுவே காயம்பட்டால் சமாளிக்க உதவும். (ஒருவேளை எதிரணியில் இடதுகை மட்டையாளர்களே அதிகம் எனில் ரியான் பராக்கையோ திலக்கையோ துபேவின் இடத்தில் எடுக்கலாம். துபேவின் பந்து வீச்சு பள்ளிக்குழந்தைகளுக்கு எதிராக மட்டுமே எடுபடும். இவர்கள் இருவரும் சுமாராக ஆப் ஸ்பின் போடுவார்கள்.)
அடுத்து ரிசர்வ் வீரர்கள். ஹர்த்திக்குக்கு காயம் பட்டால் தற்காலிகமாக அவரிடத்தில் நிதீஷை ஆட வைக்கலாம். அவருக்கு மட்டையாட்ட திறனும் ஓரளவுக்கு தடுப்பாட்டமாக பந்துவீசவும் வரும். அபாரமான களத்தடுப்பாளர். ஜிதேஷ் இதுவரை இந்திய டி20 அணியில் ஆட வைக்கப்பட்டதால் நான் அவருக்கு வாய்ப்பளிப்பதே சரியென நினைக்கிறேன். அவரும் ரிங்குவும் நன்றாக கூட்டணி வைப்பார்கள். ஆனால் ஜிதேஷால் சரிவர ஆட முடியாதபட்சத்தில் அஷுதோஷ் ஷர்மாவே என் தேர்வு. ஜடேஜாவுக்கு சிறிய காயம் உள்ளதென நினைக்கிறேன். அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டால் மாற்றாக அக்‌ஸரை எடுக்க முடியாதபடிக்கு அவரது பந்துவீச்சு மட்டம். அதனால் சாய் கிஷோரை எடுப்பேன். கிஷோரால் தன் பந்துவீச்சைக் கொண்டே ஒரு போட்டியை வென்றளிக்க முடியும்.
நடராஜனுக்கும் உடற்தகுதி எப்போதுமே சற்று ததிக்கிணத்தோம் தான். அவருக்கு மாற்று வீரரகாவே சந்தீப் ஷர்மாவைப் பார்க்கிறேன். அவரால் துவக்க ஓவர்களில் ஸ்விங் பண்ணவும் கடைசி ஓவர்களில் செமையாக மெதுபந்துகளை வீசி கட்டுப்படுத்தவும் முடியும்.
சூர்யாவை நான் அணித்தலைவராக பார்ப்பது அவரை கவனித்தவரை தலைமைப் பண்பு அவரிடம் நிச்சயமாக உள்ளது என்பதாலே. மேலும் அவரே இன்று உலக அளவில் சிறந்த டி20 மட்டையாளர்.
இந்த அணி தேர்வாகி இருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருக்கும். வென்றாக வேண்டும் எனும் நெருக்கடி இல்லாததால் ஜாலியாக ஆடி அரை இறுதியிலும் வெல்வார்கள். ஆனால் வயதானவர்களால் அது முடியாது. பழைய தோல்விகளை தவிர்ப்பதே வெற்றி என நினைப்பவர்கள் அவர்கள். சுயநலத்தின் பாதுகாப்பின்மையின் சிகரங்களாக ஆடி கடுப்பேற்றுவார்கள். அதனாலே வயதான வீரர்கள் இந்த அணியில் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...