முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவர் காந்தராஜ்




சிலநேரங்கள் வயதானவர்களுக்கு பேச்சிலும் நடத்தையிலும் பாலியல் குறும்பு அதிகமாகும். அத்துமீறுவதில் வரும் திளைப்பு அவர்களை ஈர்க்கும். அதிரடியாக பாலியல் ஜோக்குகளாக அள்ளிவிடுவார்கள். இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு சட்டென அறிவுரை மனநிலைக்குத் தாவுவார்கள். இது அவர்களுடைய உடல் ஒத்துழையாமையாலோ வறட்சியாலோ வருவது எனக் கருதுகிறேன். பெண்களை விட ஆண்களே இதை அப்பட்டமாக காட்டிக்கொள்வார்கள். மருத்துவர் காந்தராஜின் அண்மைக்கால பரபரப்பு பேட்டிகளைக் காணும்போது இதுவே நினைவுவந்தது. அவருக்கு பாலுறவு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியிருக்கிறது. அவரை யாராவது தூண்டிவிட்டால் போதும் மடைதிறந்த வெள்ளமாக கொட்டுகிறார். அப்படித்தான் நடிகைகள் குறித்த பேச்சுக்காக இப்போது புகாரில் மாட்டியிருக்கிறார். என்னிடம் கேட்டால் இக்குற்றத்தில் அவரளவுக்கு king 24 * 7 யுடியூப் சேனலில் கேள்விகேட்கும் அந்தப் பெண் நிருபருக்கும் பங்குண்டு. அவர் தன் பாட்டுக்கு சில ஆபாசப் பழமொழிகளை ("விந்துவிட்டவன் நொந்துபோவான் சார்") எடுத்துவிட்டுப் பேசிக்கொண்டே போக காந்தராஜ் "நீங்க கேட்பது கூட ஒருவித போர்னோகிரபிதான்" என்கிறார்.

காந்தராஜ் சொல்வதில் ஒரே ஒரு உண்மை மட்டும் உள்ளது: சினிமாத்துறை ஒருவித வீழ்ச்சியை எதிர்கொள்வதால் எதாவது ஒரு பரபரப்பான செய்தியை இயக்குநர்கள், நடிகர்கள், யுடியூபர்கள் தூக்கிக்கொண்டு வந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் பாலியலும் அடங்கும். பெரும்பாலும் "இது ஒரு உண்மைக்கதை சார். சமூகத்துக்கு நியாயம் கேட்டு இந்தப் படம் எடுத்திருக்கேன்." என்று இருக்கும். அதேநேரம் ஹேமா கமிஷன் உரையாடல்களில் சம்மந்தப்பட்ட பெண்கள் புகழ் வெளிச்சத்துக்காகப் பேசுவதாக நான் கருதவில்லை. ஆனால் அதை ஆதரித்தோ எதிர்த்தோ பேசுபவர்கள் பெரும்பாலும் தற்காலிக வெளிச்சத்துக்காகவே அதைச் செய்கிறார்கள். அந்தளவுக்கு சினிமாவில் பலர் 'இருளடைந்து' போயிருக்கிறார்கள் போல. திரையரங்குகள் மூடப்படுவது, ஒருநாளுக்கு மேல் பல படங்கள் ஓடாதது எல்லாம் உண்மைதான். காந்தராஜ் பேசிய தொனியும் பின்னணியும் மட்டுமே தவறு.
எனக்கு காந்தராஜ் என்றதும் நினைவுக்கு வருவது "வேட்டையாடு விளையாடு" படத்தில் வர சொல்கிற வசனம்: I have never seen such a gory murder in my life. கடைசியில் அவரது சமூகவலைதள வாழ்க்கையும் இப்படித்தான் ஆகிவிட்டது. எப்படி இருந்திருக்க வேண்டிய மனிசன் இந்த யுடியூப் வாயர்களிடம் சிக்கி இப்படி ஆகிவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...