முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீமானின் நாஜி சிந்தனை


புத்தகக் காட்சியை மிகக் கொடூரமாக ஒருங்கிணைப்பதில் நாஜி வதைமுகாம் நிர்வாகிகளைப் போலச் செயல்படும் பபாஸியின் மேடையில் நவீன நாஜியான சீமான் தோன்றிப் பேசி சர்ச்சையானது வெகு பொருத்தமானது. உதாரணமாக, சீமான் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரிடம் கேட்கிறார், "நீ யாரு சொல்லு, சொல்லு நீ தமிழனா? திராவிடன் தானே? உன்னை மாதிரி திராவிடர்கள்னு சொல்லிக்கிறவங்கதான் . ..". அவர் கேட்க உத்தேசித்தது " நீ என்னை ஆதரிக்கவில்லை என்றால் நீ தமிழனே அல்ல. நீ தெலுங்கனோ கன்னடனாவாக இருந்து திராவிடர் என்று முகமூடி அணிந்து ஏமாற்றி வாழ்கிறாய். என் கையில் நீ சிக்கினால் இம்மண்ணில் நீ வாழவே முடியாது." சம்மந்தப்பட்டவர் தான் தமிழனே என்றால் சில நூற்றாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து வந்தவர்களின் வழித்தோன்றல் நீ என்று கூறுவார். இந்த மொழி அப்படியே நாஜிக் கட்சியினருடையது. எதிரிடையே உருவாக்கி வெறுப்பை விதைத்து அபத்தமான லாஜிக்கைக் கொண்டு மக்களைக் கட்டம் கட்டி அழித்து அந்த வன்முறையில் அதிகாரத்தைப் பெறும் உத்தி. இது தமிழ் தேசியமும் அல்ல. சீமான் தமிழ் தேசியத்தின் பெயரை பயன்படுத்தி முன்வைப்பது ஒரு மோசடிக் கொள்கை. அதன் பெயர் மொழிசார்ந்த இனவெறிக் கொள்கை. தமிழ் நாஜிவாதம். அதற்கும் தமிழுக்கும் கூட எந்த சம்மந்தமும் இல்லை அவர் நூற்றுகணக்கில் பணம் வாங்குவது காவி குஜராத்திகளிடம் இருந்துதானே. அதை மறைக்கத்தான் அவர் தனக்கு முன்வந்த ஒரிஜனல் தமிழ் தேசியவாதிகளின் பெயர்களை அடிக்கடி உதிர்க்கிறார். அவர்களைத் தன் பாட்டன், பூட்டன், ஐயன், மாமா, சித்தப்பா என்றெல்லாம் பெயரொட்டுக் கொடுத்து அழைக்கிறார். அவருக்கு ஈழத்தமிழரிடையே நிதிவசூலிக்க அவசியம் இருப்பதால் பிரபாகரனைத் தன் தந்தையாகச் சித்தரிக்கிறார். இவையெல்லாம் முகமூடிகள். அவரது உண்மையான கொள்கை ஒரு பொய்யான, அபத்தமான விளக்கத்தின் அடிப்படையில் தமிழரை தம் சக தமிழர் குறித்து ஐயமும் வெறுப்பும் கொள்ள வைப்பது. பிளந்து சதா அச்சத்த்தை விதைத்து அதன் மீது நின்று அதிகாரத்தை வெல்வது. உ.தா, நீங்கள் நா.த.கட்சியை ஆதரிக்கும்பட்சத்திலும் நீங்கள் ஒருவேளை தமிழர் இல்லையோ எனும் குழப்பத்திலே இருக்க வேண்டிவரும். ஏனென்றால் சீமானின் வரையறை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஒருவரை அண்ணன் என்பார், அடுத்த கணமே துரோகி, இன விரோதி என்பார். முருகனையும் சிவனையும் வழிபடாதவர் தமிழரே அல்லர் என்பார். அடுத்து அந்த வரையறையையும் மாற்றுவார்.
மெல்ல மெல்ல சீமான் தன்னவர் என அடையாளம் காட்டுவோர் மட்டுமே தமிழர் என்றாகும். அப்போது அனேகமாக ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தாம் தமிழர் அல்லவோ எனும் அச்சமும் பதற்றமும் குழப்பமும் வழிநடத்தும். ஆகையால் தொடர்ந்து யாரையாவது அ-தமிழர் எனக் கட்டமைக்கத் தலைப்படுவர். இது அடிப்படையில் கண்ணைக் கட்டிக்கொண்டு நிற்பவரை ஒருவர் மற்றவரைத் தொடும்பட்சத்ததில் அவரிடம் தொடப்பட்டவர் வந்துவிடும் கண்ணாமூச்சி விளையாட்டுதான். இத்தகைய சித்தாந்தம் சைக்கோத்தனமானது - இது மொத்த சமூகத்தையும் பைத்தியம் பிடிக்கச் செய்யும்.

இந்தியாவுக்குள் மக்கள் நகர்ந்துகொண்டே இருப்பது பல நூற்றாண்டுகளின் இயல்பென்பதால் மூர்க்கமான இன வரையறைகள் எடுபடாது, அதன் பெயரிலான தேசியமும் அபத்தமாகும். சீமான் அதனால் தமிழரை இனமென்று அழைப்பதை கவனியுங்கள். மொழிக்குடும்பம் இருப்பதைப் போல மொழிசார் இனம் சாத்தியமில்லை என்பதே உண்மை. தமிழ் மொழியிலே 'சங்கம்' என்பதில் வரும் 'ஸ'வுக்கு எழுத்தில்லை என்பதை கவனியுங்கள். எப்படி வடமொழியின் ஓசை சங்கத்தமிழுக்கு வரமுடியும்? கஸப்பு என்போமா கச்சப்பு என்போமா? மோசம் என்போமா மோச்சம் என்போமா? இந்த ஸ பௌத்தர்கள் வழியாக பாலி, சமஸ்கிருதம் வழியாக இங்கு வந்தது. அவர்களுக்கும் நமது பழம் இலக்கியம், இலக்கண நூல்களுக்கும் அறுக்க முடியாத தொடர்பு உண்டல்லவா! இந்த மொழியே கலவை மொழிதானே. இதையெல்லாம் மறுத்து கறுப்பு-வெள்ளைச் சட்டகத்தில் வைதது தமிழ் சமூகத்தைப் பார்க்கவே தமிழரை ஒரு மொழிபேசும் சமூகமாக அல்லாமல் இனமாக இவர்கள் பார்க்கிறார்கள். ஏனென்றால் இனமென்று வரும்போது அங்கு ஆய்வுகளை யாரும் பண்ணி நிரூபிக்க முடியாது. மொழியென்றால் அதன் தோற்றக் கதையாடல் குறித்து பல கேள்விகளை எழுப்பலாம். அடுத்து இது தமிழராக இருந்தும் தமிழல்லாதவர் எனும் கற்பிதமான வரையறையை, மாயாவியை உருவாக்கி அச்சுறுத்த உதவுகிறது. சீமானின் மொழியில் இந்த மாயாவி திராவிடர். ஹிட்லரும் இப்படித்தான் யூதர்களை ஒரு மதத்தைப் பின்பற்றுவோராக அன்றி இனமாகவே வரையறுத்தார் என்பதை கவனிக்க வேண்டும். மதம் என்பது நெகிழ்வானது. யாரும் மதத்தைத் தழுவ முடியும். ஆனால் இனம் உறுதியானது. அதைக் கேள்விக்குள்ளாக்கவோ மாற்றவோ முடியாது. கன்னட மொழியை சில தலைமுறைகளுக்கு முன் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒருவர் தமிழராகவே இங்கு இருக்க முடியும். ஆனால் அதை மறுக்க சீமான் வகையறாக்கள் அவர்கள் தமிழ் மொழியினர், தமிழ் இனத்தவர் அல்ல, இரண்டும் வேறுவேறு என்கிறார்கள். இந்த தமிழ் இனம் எனும் கருத்துருவை நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கவோ நிறுவவோ முடியாது. அதை அதற்கு எதிரியாகக் கருதப்படும் கருத்துருவைக் கொண்டே நிறுவ முடியும். திராவிடர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் தெரியுமா, திராவிடர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, யார் தெரியுமா எனப் பேசுவதன் வழியாக அப்படி பாதிக்கப்பட்டவர் தமிழர் என்று கவனத்தைத் திருப்ப முடியும். தமிழ் இனத்தவர் யாரெனக் கேட்டால் சங்க காலம், முருகன் என்று கதைவிடுவார்கள். அதன் மீதும் கேள்வியெழுப்பினால் திரும்பவும் திராவிடரை விமர்சிக்கத் தொடங்குவார்கள். எதிர்-பரப்புரை இல்லாமல் அவர்களால் தமிழ் இனத்தை நிறுவவே முடியாது. ஹிட்லரும் இப்படியே ஆரிய இனத்தை வரையறுத்தார். தன் வாழ்வின் முடிவுவரை அவரால் ஆரியவாதத்தை விஞ்ஞானபூர்வமாக நிறுவ முடியவில்லை. திராவிட இனத்தவர் தமிழ் விரோதிகள் என்பது யூதர்கள் ஆரிய விரோதிகள் என்பதைப் போன்றதே.

இதைப் போன்ற நாஜி சிந்தனையை ஒருவர் வெளிப்படுத்த நவீன சமூகத்தில் நாம் அனுமதிக்கக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...