அசலான பாசிசம் அரசமைப்பில் அல்ல தனியாரிலே பரவலாக உள்ளது என்று நான் கூறுவது இதனாலே. இலக்கை அடையாத ஊழியர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் பணிய வைப்பதைப் போல அவர்களை சுயமாகத் தண்டித்து அதை நடிக்க வைப்பது இன்னொரு நவீன பாணி. அவர்கள் தமது சுயமரியாதையை இழந்தபின்னர் எவ்வளவு வேண்டுமெனினும் சுரண்டலாம் என்பதே இந்த உபாயத்தின் நோக்கம். எனது "நிழல் பொம்மை" நாவலிலும் இப்பிரச்சினையை வேறுவிதமாக - மீசையின் அளவைப் பரிசோதிக்கும் நடைமுறையாகச் சித்தரித்துப் - பேசியிருக்கிறேன். பாசிசத்தை முதலீட்டியம் ஆதரிப்பதாலே அது மத்தியில் ஆளுகிறது!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்