முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெ.எல் ராகுலின் ருத்திர தாண்டவம்


ரஞ்சிக் கோப்பை காலிறுதிப் போட்டி

Mumbai - 120 & 377
Karnataka - 173 & 325/6 (T:325)
மும்பை மிக மிக அரிதாகத்தான் இறுதிப் போட்டிக்கு வராமல் போகும். 42 முறைகள் ரஞ்சிக் கோப்பையை அடித்துள்ள அணி. உலக கிரிக்கெட்டிக்ல் ஆஸ்திரேலியா எப்படியோ அப்படி ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் மும்பை இருக்கிறது. ரொம்ப ரொம்ப சுமாராக ஆடிய தொடர்களில் கூட அது எப்படியோ இறுதிப் போட்டியை அடைந்து அபாரமாக ஆடி வென்றுள்ளது. ஆனால் இம்முறை கர்நாடகாவிற்கு எதிராக மும்பை ரயில் தடம் புரண்டுவிட்டது. டி20 உலகக்கோப்பைப் போட்டிகளை விட பலமடங்கு பரபரப்பான சுவாரஸ்யமான போட்டியாக இது அமைந்தது. முதல் நாள் மும்பை 120க்கு ஆட்டமிழந்தபோது அவர்களது சோலி முடிந்தது என நினைத்தேன். ஆனால் மீண்டு வந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் 377 அடித்தபோது அரை இறுதிக்குப் போகப் போகிறார்கள் என நினைத்தேன். ஆனால் ஆடுதளம் தட்டையாகிவிட மும்பையும் சோர்ந்து போனது. அவர்கள் விழித்துக்கொண்டு போராடியபோது ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்திருந்தது. கெ.எல் ராகுல் பிரமாதமாக ஆடி கர்நாடகாவை வெல்ல வைத்தார். ரவிச்சந்திரன் ஸ்மரனும் நன்றாக ஆடினார். அவர் இப்போதைக்கு 60க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார். ஸ்டைலான இடதுகை மட்டையாளர். திறமையாளர். ஒரே பலவீனம் ஆப் ஸ்டம்பில் விழுந்து வெளியே போகும் முழுநீளப் பந்தை கால் நகர்த்தாமல் ஆடுகிறார். அடுத்த சில பருவங்களில் பந்து வீச்சாளர்கள் இந்த பலவீனத்தை இலக்காக்குவார்கள். கெ.எல் ராகுல் இவ்வளவு கூலாக திடமாக இந்திய அணி நெருக்கடியில் இருக்கும்போது ஆடிப் பார்த்ததில்லை. சர்வதேசப் போட்டிகளிலும் அவரால் இதே போல நெருக்கடியைச் சமாளிக்க முடியுமெனில் சுலபமாக இந்தியாவின் நம்பர் 1 மட்டையாளர் ஆகிவிடுவார். ஆனால் அங்கு மட்டும் அவருக்கு கால் நடுங்கும். மரணக் கட்டை போட்டு அவுட் ஆகி விடுவார்.
செமையான போட்டி. ஹாட்ஸ்டாரில் ஹைலைட்ஸ் இருக்கும். பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...