இறுதிப் போட்டியையும் மும்பை வான்கேடில் நடத்தினால் செமையாக இருந்திருக்கும். ஆனால் குஜராத்தின் அழுது வடியும் ஆடுதளத்தில்தான் ஆடப்போகிறார்கள். பாஜக ஆள்வதால் எல்லா இறுதிப் போட்டிகளையும் அங்குதான் நடத்த வேண்டும் எனப் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. அந்த மைதானத்தின் ஆடுதளம், அங்குள்ள விளக்குகளின் அமைப்பு, தொலைவான எல்லைக்கோடுகள் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு ஏற்றவை அல்ல. பந்து மட்டையாளருக்கு வராது, விளாசினாலும் சிக்ஸர் வராது, விளக்குகளின் அமைப்பினால் களத்தடுப்பின்போது கேட்ச் பிடிப்பது சிரமம். கோழிக்கோடு கெட்டி அல்வாவில் ஈ சிக்கிக் கொண்டதைப் போலத்தான் அங்கு பந்தும். அது மைதானத்தை விட்டு வெளியே சுலபத்தில் போகாது. எல்லாம் தலையெழுத்து!

Comments