முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12 ஆண்டுகள்


 

இந்த 12 ஆண்டுகளும் மோடி வெற்றிகரமாக தன்னை நிறுவியிருக்கிறார். அதாவது காட்சி ஊடகத்தின் வித்தைகளைத் தெரிந்துகொண்டு நுட்பமாக தன்னை மக்களிடம் முன்னிறுத்தியிருக்கிறார். மிகப்பெரிய பொருளாதார வலிமையைக் கொண்டு மாநில கட்சிகளை விலைக்கு வாங்குவது, ஒவ்வொரு மாநிலமாகக் கைப்பற்றுவது, ஊடகங்களை விலைக்கு வாங்குவது, அவற்றை வைத்து பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது, அப்பிரச்சார பிம்பத்தைப் பயன்படுத்தி வாக்கு எந்திர முறைகேட்டின் வழியாகப் பெற்ற வெற்றிகளை நியாயப்படுத்துவது என்று முன்னேறி இருக்கிறார். அவர் நடத்திய பெரிய போர்கள் இந்தியாவுக்கு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியையும் தரவில்லை. இந்திராவால் வங்கதேசப் போரை வென்றதைப் போல ஒரு போரை மோடியால் வெல்ல முடியவில்லை. அவரது போர்கள் வெறும் ஷோவாக முடிந்தன. ஏனென்றால் அவரது ஆட்சிக்காலம் சீனாவின், ரஷ்யாவின் எழுச்சியையும் அந்நாடுகளுக்கு ஈடாக ஆசியாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவும் போட்டியையும் கண்டது. இம்மூன்று நாடுகளையும் தாண்டி இந்தியாவால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரை நடத்துவது கிட்டத்தட்ட அசாத்தியம். ஆகையால் அவர் இப்போர்களை பெயருக்கு நாலு ஏவுகணைகளை அனுப்பி ஊடகத்தில் தன்னை ஒரு நாயகனாக உயர்த்துவதற்குப் பயன்படுத்தினார். ஆனால் போகப்போக இப்போர்கள் உலக அளவில் அவருக்கு கெட்டப் பெயரையே ஏற்படுத்தியது. இவற்றுக்குப் பதிலாக அவர் அமைதியை நாடியிருக்கலாம், அயலுறவை மேம்படுத்தி நம் பொருளாதாரத்தை மேம்படுத்தி இருக்கலாம். அவருக்கு அப்படியான ஒரு பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலான ஆட்சி முறையோ கனவோ இல்லை என்பதை இந்த 12 ஆண்டுகளில் கண்டுகொண்டோம்.

ஒன்று ஷோ காட்டுவது, அல்லாவிடில் தேர்தல் முறைகேடு, திருட்டுத்தனமாக தேர்தல்களை வெல்வது. அதுவும் அல்லாவிட்டால் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்து வெளிநாடுகளுக்குப் பறந்து மெலோடி பிஸ்கட்டுகளைக் கொடுப்பது, படமெடுப்பது, தன் நாடகங்களை ஒளிப்பதிவு செய்வது இந்த மூன்றில் மட்டுமே அவருக்கு கவனம்.
அவரது சீர்திருத்தங்கள் எல்லாமே எதிர்க்கட்சிகளை முறைகேடாக முடக்கி தேர்தலில் வெல்லும் உத்தேசத்தையோ அதானி போன்ற காரப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்கும் துர்நோக்கத்தையோ கொண்டிருந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்க்கட்சியின் கறுப்புப் பணத்தை முடக்கி, தன் கறுப்புப் பணத்தை மட்டுமே பதுக்கி தேர்தலில் வெல்வதற்கு உதவியது. ஆனால் நாட்டு மக்களை அது நிலைகுலைத்தது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் சுதந்திரத்தைப் பறித்து கார்ப்பரேட் அடிமைகளாக்க கொண்டு வரப்ப்பட்டு கடுமையான எதிர்ப்பை சந்தித்து பின்வாங்கப்பட்டது. மாநில மறுசீரமைப்பு வரைவு இன்னும் மோசமானது. நல்லவேளை அது காங்கிரஸால் முறியடிக்கப்பட்டது. மோடியின் எதிர்-சீர்திருத்தங்களிலேயே ஆகக் கொடூரமானது தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கி வாக்காளர் பட்டியலைத் தன் கட்சியின் ஆதரவு வாக்குகளின் அடிப்படையில் திருத்தியதும், வாக்கு எந்திரங்களைத் தன் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியதுமே. இது மக்களாட்சியின் அடிவேரையே அறுத்த செயலாகிவிட்டது. இதில் இன்னும் கொடுமையென்னவெனில் இதை நீங்கள் பாராளுமன்றத்தில் தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முடியாது. வாக்காளர் பட்டியலிலோ வாக்கு எந்திரத்திலோ என்ன நடக்கிறது என்பது மிகவும் பூடகமாக உள்ளது.
மோடியின் அறிவுறுத்தலின்படியோ என்னவோ தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தின் மென்பொருளை பிறரின் ஆய்வுக்கு உட்படுத்த தயாராக இல்லை. வாக்கு எந்திரங்களைச் சரிபார்த்து ஆய்வு செய்வது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆக, தேர்தல் ஆணையமும், வாக்கு எந்திரங்களைத் தயாரிப்போரும், சரிபார்ப்போரும் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். இந்த ஆணையமும் எந்திரமும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்துகிறார்கள். அவர்களால் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியும் எனக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றின்படி பார்த்தால் பிரதமரே இன்று அனைத்து தேர்தல்களையும் நடத்தி தான் வென்றதாக முடிவுகளை அறிவிக்கிறார். நிலைமை ரொம்ப கேவலமாக இருந்தால் தான் குறைந்த வாக்குகளில், இடங்களில் வென்றதாக அறிவித்துக் கொள்கிறார். அவரால் ஒருபோதும் தன் தோற்றதாக அறிவிக்க இயலாது. அவர் மென்மையான மனம் படைத்த ஒரு குழந்தைப் பிரதமர்.
மோடியின் இப்பத்தாண்டுகளில் நமது பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. விலைவாசி தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. பணவீக்கம் மோசமாகிக் கொண்டே போகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கிய சராசரி சம்பளத்தை இன்று வாங்கினால் ஒரு குடும்பத்தால் நிம்மதியாக மூன்று வேளைகள் சாப்பிட முடியாது. கிட்டத்தட்ட எல்லாருமே கடனில்தான் வாழ்கிறோம். பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி டெலிவரி பாய்களாகி கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள். எல்லாரும் கடும் எரிச்சலில் வாழ்கிறார்கள். இது பெயருக்குத்தான் மக்களாட்சி. மக்களுக்குத் தம் விருப்பப்பட்டோரைத் தேர்ந்தெடுக்க இயலவில்லை. வாக்களிப்பதாக மக்களும் நடிக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிரதமரும் நடிக்கிறார். மக்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆனால் கையில் பணம் நிற்பதில்லை.
பொருளாதார அளவில் நம்மை முன்னேற்றவோ நாட்டின் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவதிலோ இந்த பாஜக அரசு முயலவில்லை. அவர்களுக்கு அத்தகைய திட்டங்கள் ஏதுமில்லை. அவர் அடுத்து இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தன்னைப் போல 'நடிகர்கள்' ஆள வேண்டும் என்று விரும்புகிறார். நடிகர்கள் என்றால் எதையுமே செய்யாமல் சும்மா ஷோ காட்டிக் கொண்டு சமூக வலைதளங்கள், ஊடகம் வழியாக பிம்பக் கட்டமைப்பைச் செய்து வாக்கு எந்திரத்தைக் கொண்டு மட்டுமே வென்று எதிர்காலத்தில் தாம் வெல்வதற்கு முழுமையாக பாஜக தலைமையை நம்பி இருப்பவர்கள். தமிழ்நாட்டில் அப்படி ஒருவர் கிடைத்துவிட்டார் (விஜய்). வேறு சில மாநிலங்களிலும் கிடைத்துவிட்டார்கள் (அஸ்ஸாம் முதல்வர் ஒரு உதாரணம்). ஒரே நாடு, ஒரே தேர்தலும் வந்துவிட்டால் நடிக்கும் முதல்வர்கள் திட்டம் இன்னும் துரிதப்படும்.
மோடியினால் ஏற்பட்ட ஒரே பயன் நமது மக்களாட்சி அமைப்பு எவ்வளவு பலவீனமானது எனக் காட்டித் தந்ததுதான். அதனாலே நான் மோடியை ஒரு மக்களாட்சி ஹேக்கர் என்று அழைப்பேன். மக்களாட்சியை ஹேக் செய்து நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த மோடிக்கு என் வாழ்த்துகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...