முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நதிநீர் பங்கீடு - மக்களை ஏமாற்றும் உத்தி


 

சட்டமன்றத்தில் ஏதோ மியூசிக் செயர் விளையாட்டு போல சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்த மேகாதது / நீர்ப்பங்கீடு விவாதங்களைப் பார்த்தபோது தோன்றியது:

1) மேகதாது விவகாரம் பற்றிப் பேசிய ஆதவ் அர்ஜுனா விரிவாக கடந்த சில ஆண்டுகளில் திமுகவின் சட்டப் போராட்டங்களையும் அவர்களை அடுத்து தவெக ஆட்சியில் செய்ய நினைக்கிற ஒரு குறிப்பிட்ட மாற்றத்தையும் தெளிவாக விளக்க்கினார். யார் அதைக் குறித்து என்ன சொன்னாலும் உடனே எழுந்து ஏற்கனவே சொன்னதையே மேலும் விளக்க முற்பட்டார். அடுத்து யாராவது மேகதாது என்று உச்சரித்தாலே எழுந்து மீண்டும் சொன்னதையே புள்ளிவிபரத்துடன் சொன்னார். எனக்கு அவரைப் பார்த்தபோது ஆறு மாடி பிராத்தல் ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.
2) ஆதவ் அர்ஜுனாவிடம் ஒரு நல்ல விசயம் அவருக்கு எதையும் பெரிதாக மறைத்துப் பேசத் தெரியாது. (அவர்தான் தவெகவின் உண்மையான 'சில்க் ஸ்மிதா'.) கர்நாடகா இப்போது விவசாயிகளின் தேவைக்காக நீரைக் கோரவில்லை, பெங்களூர் மக்களுக்கான குடிநீரைக் கோரி வழக்காடுமன்றம் செல்கிறது. அதனால் அதற்கு ஏற்ப தம் அரசும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். ஏற்கனவே அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் சரியாக வேலை செய்யவில்லை, பாரபட்சமாக நடந்துகொள்வது என்பதைக் காட்டி புதியதொரு நடுவர் மன்றத்தை அமைக்கக் கோருவதாகவும், இதன் மூலம் மேகதாது அணை கட்டுவதை சிறிது காலத்துக்குத் தள்ளிப் போட முடியும் என்றார். அதாவது இவர்களுடைய அரசின் உத்தேசம் பிரச்சினையை சரிசெய்வதில்லை, இப்படியே வாய்தா கேட்டு இழுத்தடிப்பதுதான். கர்நாடகா தண்ணீர் தராவிட்டால் அறிக்கை விடுவது, மேலும் முறையிட்டு இழுத்தடிப்பது என்று செய்வார்கள் எனத் தோன்றுகிறது. இதனால் மக்கள்தாம் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.
3) எடப்பாடியாருக்கு ஆதவ் அர்ஜுனாவின் இந்த திமுக புகழ்பாடுதல் பிடிக்கவில்லை. அவர் எழுந்து ஏதோ விதி 110 என்று ஏதோ சொல்லி இந்த திமுக திருத்தத்தை தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தார். இதெல்லாம் ஒரு மேம்போக்கான விளையாட்டுதான். கேட்டிருப்பவர்களுக்கு இது மாமன்றம் அல்ல இது ஒரு 'மாமா மன்றம்' என உணர வைக்கிற விசயங்கள். தண்ணீர் எங்களுக்கு உயிர்ப்பிரச்சினை என்றெல்லாம் கதைவிடுவது, வழக்குப் போடுவது என்று ஆளாளுக்கு ஏதோ "காப்காவின்" விசாரணை நாவலைப் போல மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
4) தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் தண்ணீர்ப் பிரச்சினை உள்ளது. நான் எட்டாண்டுகளுக்கு மேலாக பெங்களூரில் வசித்ததால் எனக்கு அவர்களுடைய நெருக்கடி நன்றாகப் புரிகிறது. கர்நாடக விவசாயிகள் சிலரிடம் பேசி வருவதால் வறட்சியால் அவர்கள் படும் பாடும் புரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிக்கலை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறேன். இது ஒரு நதிநீர் பங்கீடு பிரச்சினை அல்ல. மழை நீரை சேகரிப்பதில் அரசுகளுக்கு நீண்ட காலமாக ஆர்வம் இல்லை - அதுதான் பிரச்சினையின் மையம்.
நகரமயமாக்கலில் மட்டுமே ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். ஏனென்றால் அதில்தான் அவர்கள் வளர்ச்சி, புள்ளிவிபரம் எனக் காட்டி ஓட்டு வாங்க முடியும் என நினைக்கிறார்கள். தொழிலதிபர்களிடம் கட்சி நிதியும் சொந்த நிதியும் வாங்க முடியும். அமைச்சர்களில் பலரும் பெரும் தொழிலதிபர்கள். விவசாயிகள் அல்லர். முந்தைய அரசுகள் - அதாவது அந்த காலத்து மன்னர்கள் - நீர் மேலாண்மையை இன்னும் திவிரமாக முன்னெடுத்தார்கள். அவர்களுடைய பொருளாதார ஆதாரமே வேளாண்மையும் வணிகர்களிடம் இருந்து பெறும் வரியுமே. ஆகையால் அன்று அவர்கள் நீர்நிலைகளைப் பராமரித்தைப் போல இன்று யாரும் செய்ய மாட்டார்கள். இன்று இது அதன் அடியாழத்தில் ஒரு நதிநீர்ப் பங்கீடு பிரச்சினை அல்ல. நதியில் நீர் வரத்து குறைந்து கொண்டு போக, மழை பொய்த்துக்கொண்டே இருக்க, நீரைச் சேகரித்து வைக்கும் கட்டமைப்புகளும் மறைந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு பாரபட்சமான பொருளாதார அணுகுமுறைப் பிரச்சினை. காந்தி 80 ஆண்டுகளுக்கு முன் சொன்னதுதான் இன்று இத்தகைய வடிவம் எடுத்திருக்கிறது: வளர்ச்சியை ஒற்றைப்பட்டையாக நாம் அணுகினால் அதனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான கட்டமைப்புகள் சிதைந்து போகும்.
மேலும், அதிமுகவினரும் பாமகவினரும் கண்ணீர் ஒழுகப் பேசுவதைப் போல இது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல. இது நகரமயமாக்கலுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டம். சமச்சீரான வளர்ச்சியின்மைதான் இங்கு வில்லன். எல்லா வேலைகளையும் நகரத்தை நோக்கி இழுக்க நினைப்பதும், ரியல் எஸ்டேட்டில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்ய வைப்பதுமே பிரச்சினை. அதனாலே இன்று விவசாயம் என்பதைத் தாண்டி மக்களின் பயன்பாட்டுக்காக அணைகட்டி நீரை பெங்களூருக்கு அனுப்ப கர்நாடக அரசு நினைக்கிறது. தமிழ்நாட்டிலும் நிலத்தடி நீர் காலியாக ஆக இது ஒரு பொதுப்பிரச்சினை ஆகும். இதை நகரம் / சமச்சீரற்றவளர்ச்சி vs பொதுமக்கள் எனப் பார்பதே சரி.
நமது பொருளாதாரப் பார்வை காந்தியம் சார்ந்ததாக மாறாமல் தண்ணீர்ப் பிரச்சினை வெறுமனே அரசியலாகப்பட்டு, கார்ப்பரேட் பொருளாதாரம் சார்ந்ததாக மட்டுமே இருக்கையில் அது மக்களை ஏமாற்றும் உத்தியாகவே முடியும். அதை ஆதவ் அர்ஜுனாவும் - நாங்க ஏமாற்றத்தான் போகிறோம் என்று - ஒப்புக் கொண்டது நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...