முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறு அணில் மீது பெரிய மலையை வைப்பது

dmk mp a rasa speech on unemployment in lok sabha

ஆ. ராசா ஊடகச் சந்திப்பில் விஜய்யைக் குறித்துப் பேசுவதைக் கேட்டேன். அதில் விஜய் மீது அவர் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு அபாண்டமானது - ஏன் பிரதமரிடம் மாநில நலனை வலியுறுத்தி விஜய் பேசவில்லை, ஏன் பதுங்குகிறார் என ஆ. ராசா கேட்கிறார். யோசித்துப் பாருங்கள் ஆ. ராசா, இதெல்லாம் சாத்தியமா?

முதலில், ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து எந்திரத்தை டியூன் செய்து வைத்து அவரை வெல்ல வைத்து முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். அவர்களை விஜய்யால் பகைக்க முடியுமா?
அடுத்து, அவர் மின்னனு வாக்கு எந்திரத்தின் 'உதவியை' இடைத்தேர்தலிலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் நம்பியிருக்கிறார். அவரால் பாஜகவை பகைக்க முடியுமா?
அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒரு கும்பல் கூட்டணிக்குள் வந்ததும், வேறு சில எம்.எல்.ஏக்கள் பதவியைத் துறந்து தவெகவில் சேர்ந்ததும் பாஜகவின் கைக்குள் தவெகவின் குடுமி போய்விட்டது. மயிரிழையில் ஆட்சி தொங்குகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பாஜக தலைமை எதிர்த்தால் விஜய் முழுக்க முன்னாள் திமுக கூட்டணிக் கட்சியினரை நம்பியிருக்க வேண்டியிருக்கும். அவர்கள் விலகினால் ஆட்சி கவிழும்.
அடுத்து, கரூர் வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் விஜய்யின் கதி என்னவாகும்?
அதிமுக, திமுகவைக் கூட பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ என்று பயமுறுத்தியிருக்கலாம். ஆனால் விஜய்யின் வெற்றியே பாஜகவால் உருவாக்கப்பட்டது, அவர் தொடர்ந்து அவர்களுடைய உதவியை நம்பியிருக்கிறார். திமுகவையும் அதிமுகவையும் போல அவர் முழுமையாகத் தன் ஆதரவாளர்களை மக்களை நம்பி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர்.
இது போதாதென்று பாஜக ஒரு பக்கம் ஊடகங்களை முடுக்கி விட்டும் இன்னொரு பக்கம் அண்ணாமலையை ஒரு புது கட்சி ஆரம்பிக்க வைத்தும் விஜய்யின் ஆட்சியை அடுத்து அடித்தாடப் போகிறது. அவர் இதைக் குறித்த நடுக்கத்தில் இருக்கிறார். அவர் அல்லுசில்லு என்று சாடியது அவர்களையே.
கடைசியாக, அவருக்கு அசலான எதிர்ப்பரசியலில் நம்பிக்கை இல்லை. சொல்லப் போனால் எந்த அரசியலும் அவருக்கு நம்பிக்கையில்லை. அவரது பேச்சைக் கேட்கிற யாருக்கும் இது புரியும் - தன் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் வாக்களித்ததாகச் சொல்லுகிறாரே தவிர தன்னுடைய இதுவரையிலான செயல்பாடுகளை நம்பியோ தன் அரசியலுக்காகவோ வாக்களித்ததாக அவர் நம்பவில்லை.
தவெக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கல்ட் அமைப்பு. ஜக்கியின் ஈஷா மையத்தை போன்ற ஒன்று. ஜக்கி வாசுதேவ் முதல்வர் ஆனால் என்னவெல்லாம் பண்ணுவாரோ அதுவே விஜய்யாலும் முடியும்.
ஒரு சிறு அணிலால் ஒரு குட்டிக் கல்லைத்தான் தூக்க முடியும். அதன் முதுகில் பெரிய மலையைத் தூக்கி வைக்கக் கூடாது. ஆ.ராசா அவர்களே நீங்கள் செய்வது ஒரு சாடிஸச் செயல். அவர் எங்குமே தன்னால் இயலும் என்று கோராததையெல்லாம் அவரைச் செய்யக் கேட்கிறீர்கள். அவர் சில வசனங்களைப் பேசி தன் ரசிகர்களைக் கவர்ந்து வாக்கு எந்திர உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். அதற்காக அவரிடம் அநியாயமான எதிர்பார்ப்புகளை வைக்கக் கூடாது. அவர் தான் தேர்தல் பரப்புரையில் செய்த பணிகளை இப்போதும் செவ்வனே செய்கிறார். எதைப் பார்த்து வாக்களித்தார்களோ அதைச் செய்கிறார். அதில் என்ன தப்பு? எனக்கு சத்தியமா புரியல!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...