முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொகுதி மறுவரையறைச் சட்டத்திற்கு ஏன் திமுக ஆதரவளிக்கக் கூடாது?



இரு பார்வைகள்

1) 50% இடங்கள் எல்லா மாநிலங்களுக்கும் அதிகாரிக்கப்படுமெனில் மாநில மறுவரையறைச் சட்டம் பெரிதாகச் சிக்கலற்றதாகவே தெரிகிறது. கார்த்தி சிதம்பரம் இதற்கு எதிராக வைக்கும் ஒரே வாதம் பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகிவிடும், செறிவான விவாதங்கள் சாத்தியப்படாமல் போகும் என்பதே. இது ஒரு வலுவான வாதம் அல்ல.
2) அதேநேரம் இடங்களின் எண்ணிக்கை வித்தியாசம் தென்மாநிலங்களை மறுவறையரைக்குப் பின் மிக மோசமாக பாதிக்கக்கூடிய நிலையும் வரக் கூடும். இப்போது நமக்கும் (தமிழ்நாடு + பாண்டிச்சேரி) உ.பிக்குமான எண்ணிக்கை வித்தியாசம் 40 என்றால் இந்த 50% அதிகரிப்பிற்குப் பிறகு அது 60 ஆகும். பாஜக ஆதரவு உள்ள இந்தி பெல்ட் மாநிலங்களைப் பார்ப்போம்.
இப்போதைக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அவற்றிற்கு 171 இடங்கள் உள்ளன. மறுவரையறைக்குப் பிறகு அது 256ஆக மாறும். தென்மாநிலங்களுக்கு இப்போதுள்ள இடங்கள் 130.
அதிகரிப்பிற்குப் பிறகு அது 195 இடங்களாகிறது. இப்போதைய வித்தியாசம் 41 இடங்கள் எனில், , மறுவரையறைக்குப் பின் அது 62 ஆகிறது. இது பீகாரை உள்ளடக்காமல்தான். பீகாரையும் சேர்த்தால் வித்தியாசம் 122 இடங்களாகி விடும். இங்குதான் சிக்கலே ஆரம்பிக்கிறது. ஏனென்றால் அப்போது பாஜக பீகாரிலும் ஆதிக்கம் செலுத்தினால் மொத்தமுள்ள 317 இடங்களில் கணிசமானவற்றைப் பெற்று தென்மாநிலங்களும் தாம் வலுவாக இல்லாத பிற மாநிலங்களையும் வைத்துக் கூட தொடர்ந்து ஒன்றியத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படக் கூடும். குறிப்பாக, பாஜக தேர்தல் எந்திரத்தின் உதவியுடன் கடும் போட்டி உள்ள தொகுதிகளில் சொற்ப வித்தியாசத்தில் பல இடங்களை வெல்லுகிறது, பிற கட்சிகளின் எம்.பிக்களை மிரட்டியும் ஆசை காட்டியும் தொடர்ந்து தன் வசம் இழுத்துக் கொள்கிறது என்பதையும் பார்க்கும்போது நிஜமான ஆதரவு இன்றியே கூட அவர்களால் தேர்தலை ஒரு வேடிக்கை நிகழ்வாக மாற்றி அடுத்த 30 ஆண்டுகளும் எதிர்க்கட்சியே இல்லாத தேர்தல் எதேச்சதிகார ஆட்சியை நடத்தக் கூடும். நாம் சில லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல, பாகிஸ்தானைப் போல கைப்பற்றப்பட்ட தேசமாகி விடக் கூடும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களை மட்டும் வென்ற பாஜகவால் 107 இடங்களை 8 இந்தி பெல்ட் மாநிலங்களில் இருந்து பெற முடிந்தது. மறுவரையறைக்குப் பின் அடுத்த தேர்தலில் இதே ஆதரவு தொடருமானால் அந்த எண் 127 ஆகி விடும். கடந்த தேர்தலில் பாஜக மீதமுள்ள 133 இடங்களைப் பெற்ற குஜராத், மகாராஷ்டிரா, மே.வங்கம், ஒடிஷா, அஸாம் ஆகிய மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அங்கும் ஆதரவு தொடருமானால் அவற்றின் எண்ணிக்கையும் 151இல் இருந்து 227 ஆகி விடும். இந்த 76 இடங்களின் வித்தியாசமும் பாஜகவுக்கு கைகொடுக்கக் கூடும். பாஜக ஆதரவு ஹிந்தி பெல்ட், ஹிந்தி பெல்ட் அல்லாத மாநிலங்களுக்கு கிடைக்கும் உபரி இடங்களைப் பார்த்தால் 198 ஆகிறது. சாட்ஜிபிடி 182தான் சரியான எண் என்கிறது. 182-198 என வைத்துக் கொண்டாலும் இது கணிசமான வித்தியாசமே.
இந்த 50% அதிகரிப்பை தமிழ்நாடு vs உ.பி என சுருக்கினால் அது ஒரு சித்திரத்தை அளிக்கும். ஒட்டுமொத்தமாக பாஜக ஆதரவு மாநிலங்கள் vs பாஜக ஆதரவு குறைந்த மாநிலங்கள் எனப் பார்த்தால் அது 180-200 வரையிலான வித்தியாசத்தைக் கொடுக்கிறது. அதாவது, தற்போதைய தேர்தல் போக்குகள் தொடர்ந்தால், பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னிலை உருவாகக்கூடும். பாஜகவின் எண்கள் 240இல் இருந்து 440 (815) ஆகக் கூடும். 543இல் 240 என்பதை விட இது மேலான எண் தானே?
ஒரு ஓட்டப்பந்தயத்தை எடுத்துக் கொண்டால் சில அடிகள், அங்குலங்கள் வித்தியாசமே வெற்றியாளருக்கும் தோல்வியாளருக்கும் இருக்கும். பாஜக இதை வைத்துத்தான் ஆட நினைக்கிறது.
ஆகையால் திமுக இந்த தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிப்பது ஒட்டகத்தைத் தன் முகத்தை மட்டும் கூடாரத்திற்குள் அனுமதிப்பதைப் போலாகிவிடும். ரெண்டு அடிகள் பின்னால் போவதே நல்லது.
பி.கு: பாஜகவின் ஆதரவு மேற்சொன்ன இந்தி பெல்ட் மற்றும் இந்தி பெல்ட் அல்லாத மாநிலங்களிலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தலைகீழாக மாறவும் கூடும்தான். அதேநேரத்தில், பொதுவாக வரலாற்றைப் பார்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை இம்மாநிலங்கள் தேர்தல் முடிவுகளில் தருவதில்லை. படிப்படியாக வளர்ச்சி பெறும் கட்சிகள் ஒரேயடியாக ஓய்ந்து போவதும் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...