கரப்பான்களின் போராட்டங்களில் நான் ரசித்தது போராட்டக் களத்துக்கு மைக்குடன் வந்த பாஜகவுக்கு சதா ஒத்து ஊதும் சேனல்களின் வித்துவான்களைப் பயங்கரமாகக் கலாய்த்து, கேள்வி கேட்டு, தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி அடித்துத் துரத்திவிட்டதுதான். ஏனென்றால் இவர்கள் இப்போராட்டங்களை ஏதோ தேசத்துரோகம் எனும் கணக்கில் சித்தரித்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு இச்சேனல் வித்துவான்கள் அவமதிக்கப்படுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு காலத்தில் மக்கள் முன்னால் ஹீரோவாக இருந்தவர்கள். அன்று மக்கள் தரும் கவனமே சேனல்களின் விளம்பர வருமானத்துக்கு வழிவகுத்தது. என்னப் பிரச்சினை இந்நிலை மெல்ல மெல்ல மாறி மக்களின் ஆதரவே அவசியமில்லை எனும் இடத்தை ஊடகங்கள் பெற்றுவிட்டன. அச்சிதழ்களுக்கு அரசு விளம்பரம் என்றால் சேனல்களுக்கு நேரடியாகக் கட்சிகள் கொடுக்கும் பணம். இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரும் சரிவைப் பார்த்து வருகிறோம். அதுவும் 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அவர் பல தொலைக்காட்சி நிறுவனங்களை வாங்கி அதன் வித்துவான்களைத் தன் பங்களா நாய்களாக மாற்றிக் கொண்டார். அவர்களும் பாவம் சம்பளத்துக்காக என்னென்னமோ குட்டிக்கரணங்களை தினமும் அடிக்கிறார்கள். இவர்கள் தமது பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் தினமும் தவறாமல் மோடியின் அடி முதல் முடி வரை ஜால்ரா அடிப்பதைப் பார்த்து மக்களுக்குக் கடுப்பாகி விட்டது. இந்தியாவின் எதார்த்த நிலைக்கும் டிவி சேனல்களில் காட்டப்படுவதற்கும் துளிகூட சம்மந்தம் இருக்காது. இதனால் மக்கள் இதையெல்லாம் பார்ப்பதே இல்லை. பார்க்க நேரும்போது கக்காவைப் பார்த்ததைப் போல முகம் சுளிக்கிறார்கள். டிவி ஊடகம் மொத்தமாகவே தன் மதிப்பை மட்டுமல்ல தேவையையும் இழந்து யாரும் விரும்பாத ஒரு மக்கள் எதிர்ப்புக் குழுவாகி விட்டது. ஆகையால் இப்போதைய இளைஞர் கிளர்ச்சிச் சூழலில் அவர்கள் சிக்கியபோது பொளந்து விட்டார்கள்.
ஆனால் பாருங்கள், நாளை விடிந்ததும் மேக் அப் போட்டுக் கொண்டு பாஜக அரசுக்கான புதுப்புது பிரச்சாரங்களை எடுத்து வந்து ஆவேசமாகப் பேசுவார்கள். சூடுசுரணை இல்லாத ஜென்மங்கள். இவர்களிடையே புத்திசாலி ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி தான். அவர் வெளியே தலையே காட்டவில்லை.
ஏதோ இந்தி, ஆங்கிலச் சேனல்கள் மட்டும்தான் இப்படி என்றில்லை. தமிழ் சேனல்கள் மக்களை ஏமாற்றிப் பிரச்சாரம் செய்வதில் பெரும் சாதனைகளைப் பண்ணியிருக்கின்றன. கரூரில் நடந்த விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக புதிய தலைமுறையும் தந்தி டிவியும். ஒருநாள் இவர்களும் இதே போல பொதுமக்களிடம் அசிங்கப்படப் போகிறார்கள் என இப்போதே தெரிகிறது.
கருத்துகள்