முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்க்கட்சிகளை ஒழிக்கும் பாசிச சிந்தனை


 

விஜய் ஆட்சிக்கு வந்ததுமே நான் சொன்னேன் - அவர் ஒரு பாசிஸ்டு என்று. என் கணிப்பு உண்மையாகிக் கொண்டே வருவதில் எனக்குச் சற்று வருத்தம் உண்டு. அனிதா ராதா கிருஷ்ணன் மீதான கைது, அவரிடம் பேசப்பட்ட பேரம், மிரட்டலை எடுத்துக் கொள்வோம்.

ஊடகங்களிடம் இதைக் குறித்துப் பேசிய ஒரு திமுக தலைவர் இது பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி என்றார். அதாவது அமலாக்கத்துறையை அனுப்பி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை மிரட்டி தன் கட்சியில் சேர்த்து பொய் வழக்குகளைக் களைந்து அவர்களை உத்தமர்களாக அறிவிப்பது பாஜக தொடர்ந்து நாடு முழுக்கச் செய்து வருவது. ஆனால் பாஜகவுக்கும் ஒரு நடைமுறை ஒழுங்கு, பொறுமை உண்டு - அவர்கள் மெல்ல மெல்ல அழுத்தம் கொடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களைக் கரைத்து தன் வசம் இழுக்கப் பார்க்கும். முடியாதபட்சத்தில் அமலாக்கத்துறை மிரட்டல் வரும். அப்போதும் கனிந்து விழக் காத்திருக்கும் கனிகளே அவர்கள் மடியில் விழும். பாஜக தன் நோக்கம் எதிர்க்கட்சிகளே (அதாவது காங்கிரஸ்) இல்லாத பாரதம் என்பதை வெளிப்படையாக அறிவித்தவர்கள். ஏன் என்று நாம் கேட்க வேண்டும் - எதிர்க்கட்சிகளே ஒரு மக்களாட்சி அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பவர்கள். கூடவே ஊடகங்கள், நீதித்துறை ஆகியவையும் சிவில் சமூகமும் ஒரு ஆளும் கட்சி தன் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும். பாஜக அடிப்படையில் ஒரு பாசிசக் கட்சி என்பதால் எதிர்க்கட்சியினரை பொறி வைத்துப் பிடித்தும், எதிர்க்கட்சிகளை வாக்கு எந்திரம் வைத்து தளர்த்தியும் அழித்து வருகிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் எந்த வித மாற்றுக் கருத்துக்களையும் விவாதங்களையும் விரும்பவில்லை. முழுமையான அமைதியும் அடிபணிதலுமே மோடியின் விருப்பம். மோடியை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அவர் வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். அதுவே அவரது மாடல் அரசு. அவர் நாடாளுமன்றத்துக்குத் தொடர்ந்து வராதததும் ஊடகங்களைச் சந்திக்காததும் பொதுமேடைகள், டிவி, வானொலி வழியாக நேரடியாக உரையாடுவதும் இதையே சொல்கின்றன. அடுத்து, அவர் ஊடகங்களை விலை கொடுத்து வாங்கி தன் அடிமைகள் ஆக்கினார். கடந்த சில வருடங்களாக மோடி மீதான ஒற்றை விமர்சனத்தைக் கூட பிரபல ஊடகங்களில் நீங்கள் பார்க்க முடியாது. அடுத்து, அவர் நீதித்துறையிலும் ஊடுருவி தன் கொள்கையைப் பின்பற்றும் நபர்களை அதிகமாக நீதிபதிகளாக்குகிறார். சிவில் சமூகத்தைத் தொடர்ந்து சட்டத்திருத்தம் வழியாகவும், கைதுகள், கொடுந்தண்டனைகள் வழியாகவும் அழித்தொழித்து விட்டார். எதிர்கால சந்ததியினர் தன் கொள்கைகளை மட்டுமே நம்ப வேண்டும் என கல்வித்துறையிலும் பல ஊடுருவல்கள் செய்து, பாட்டத்திட்டங்களை மாற்றி வருகிறார்.
விஜய்யும் அதையே செய்கிறார். எதிர்க்கட்சிகளை உடைத்து எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து வாங்கி அவர்களை ராஜினாமா செய்ய வைப்பது, திமுகவினரை மிரட்டுவது, தன் கட்சியில் வந்து சேர்ந்தால் அமைச்சர் பதவி அல்லாவிட்டால் கைது என பேரம் பேசுவது, இரண்டு ஊடகங்களின் பங்குகளை வாங்குவது, வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வாட்ஸப் குழுக்கள் வழியாகப் பணம் கொடுத்து தான் அளிக்கும் தகவல்களை வைத்துப் பிரச்சாரம் செய்ய வைப்பது, தன்னை விமர்சிக்கும் இளைஞர்களைக் கைது பண்ணுவது, எதிர்க்கட்சியினரை சட்டமன்றத்தில் இகழ்வது, தன்னை மக்கள் கொள்கை குறித்து கேள்வியோ விமர்சனமோ இன்றி வாக்களித்து ஆதரிக்க வேண்டும் எனக் கோருவது, பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை தன் பாடல்களைப் பாடி தனக்காக கோஷமிட வைக்க தன் கட்சியினரை அனுப்புவது என எல்லா பாசிசத் திணிப்பு முயற்சியில் இருக்கிறார்.
இவர்களுக்கு முன்பு ஹிட்லரும் இதையே செய்தார். அவர் எதிர்க்கட்சிகளை தன் அடியாட்களையும் போலீசையும் ஏவி விட்டும், தடை செய்தும் ஒழித்தார். அடுத்து, அவர் ஊடகங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஊடகங்களைத் தான் மக்களிடம் பேசுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்குமான கருவியாக்கினார். குழந்தைகளைத் தன் பிரச்சாரத்துக்காக Hitler's Youth எனும் அமைப்பில் சேர்த்தார். அவர் ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளில் இப்பிரச்சாரத்தில் குழந்தைகள் ஈடுபடுவது சட்டப்படி கட்டாயமானது.
அதேநேரம், விஜய்யும் அவருடன் உள்ள லாட்டரி கும்பலும் பாஜகவில் இருந்து ஒருவிசயத்தில் சற்று வித்தியாசப்படுகிறார்கள் - அவர்கள் எதிர்க்கட்சிகளையே விரும்புவதில்லை என்பதுடன் எதிர்க்கட்சி ஒழிப்பில் பொறுமையும் நாசூக்கும் கூட அவர்களிடம் இல்லை. அடித்துப் பிடுங்குவது, மிரட்டுவது என நேரடியாகவே அதைச் செய்கிறார்கள். பாஜக 12 ஆண்டுகளில் 'செய்ததை' 50 நாட்களில் சாதிக்க நினைக்கிறார்கள். விஜய் தொடர்ந்து தன் மீதான விமர்சனம் எழக் கூடாது என்பதற்காகவே ஒன்று எதிர்க்கட்சியிரை முழுமையாகத் தன் கட்சிக்குள் மிரட்டியோ ஆசை காட்டியோ இழுத்துக் கொள்ளப் பார்க்கிறார். இன்னொரு பக்கம், இதே எதிர்க்கட்சியினர் மீது ஊழல், அவதூறு எனப் பொய்ப் புகார்களை வைத்து ஒரு பிரச்சாரத்தை செய்து தன்னைக் குறித்து யாரும் பேசாதிருக்குமாறு பார்த்துக் கொள்கிறார். முதல் சட்டமன்றக் கூட்டம் முடிந்ததுமே இதை ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுடைய நோக்கம் எதிர்க்கட்சியே இல்லாத தமிழ்நாடுதான். மேலும் அவர் தன் கட்சியிலும் வலுவான தலைவர்கள் இருப்பதை, அவர்கள் தம் பெயரையும் ஆற்றலையும் கொண்டு செயல்பட்டு தேர்தலில் வெல்வதை விரும்புவதில்லை. ஊர்பேர் தெரியாத ஒருவர் விஜய் எனும் சொல்லுக்காக வெல்ல வேண்டும், அதிகாரம் கிடைத்த பின்னரும் அவர் விஜய்யின் ஆணைக்கேற்ப மட்டுமே தான் செயல்படுவதாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் (ஜெயா பாணி). ஏனென்றால் பாசிசம் அடிப்படையில் விவாதங்கள், மாற்றுக் கருத்துக்கள், தனிமனித முகமை, தனிமனித தேர்வு என எதையும் விரும்புவதில்லை.
ஒரு ஊடகமாக வெகுமக்கள் சினிமாவும் இத்தகையை தன்மை கொண்டதே - சினிமா பார்வையாளனுக்கு சுயசிந்தனை, சுய-கற்பனை, முகமை என எவையும் இருக்க இயலாது. தொடர்ச்சியாக வரும் ஒலி, ஒளி பிம்பங்களைப் பின்தொடர்ந்து தன் மூளையைக் கழற்றி வைத்து உட்கார்ந்திருப்பவரே வணிக சினிமா பார்வையாளர். சினிமாவையே தன் கருவியாகக் கொண்ட ஒருவர் பாசிசவாதியாவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. விஜய்யின் அத்தனை அதிரடி மசாலா படங்களும் இத்தகையை தன்மையைக் கொண்டவையே. அவ்விதத்தில், அவர் முதல்வராகி 'நடிக்கவில்லை' - பிம்பங்கள் மூலம் முன்பு செய்த அதே பாசிச அரசியலை இப்போது நேரடியாக முன்னெடுக்கிறார். தமிழ்நாடே ஒரு திரையரங்கு ஆவதன் பொருள் தமிழ்நாடு கேளிக்கை அரங்காகும் என்பதல்ல. இங்கும் யாருமே சிந்திக்கவோ பேசவோ இயலாத நிலை ஏற்படும் என்பதே.
கைது, மிரட்டல், எதிர்க்கட்சிகளை ஒழித்தல் இந்த புரோஜெக்டின் முதற்பகுதிதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...