முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எழுத்தாளரின் கற்பனை

 நேற்று மனம் கொஞ்சம் உடைந்து விட்டது. காலை முதல் என் நாவலில் அமர்ந்து சில பகுதிகளைத் திருத்திக் கொண்டிருந்தபோது 30% பக்கங்களை அழிக்க வேண்டும் என ஒரு அனுமானம் தோன்றியது. நிச்சயமில்லைதான். ஆனாலும் அதை நினைத்ததும் மனம் உடைந்துவிட்டது. எவ்வளவு நேரம் செலவழித்து ரசித்து எழுதிய பகுதிகள். ஆனால் வேறு வழியில்லை எனத் தோன்றுகிறது.

சில நாவல்கள் நாம் எழுத எழுதத் தோன்றுகின்றன. அப்போது தேவையானவற்றை வைத்துக் கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கத் தேவையேற்படும். பல்வேறு பாதைகள் கொண்ட ஒரு வரைபடத்தைக் கற்பனை செய்யுங்கள். எந்தப் பாதையில் சென்று இலக்கை அடையலாம் என்றாலும் சிறந்த பாதையை நாம் பயணித்தே கண்டுபிடிக்க முடியும். அச்சிறந்த பாதை சில நேரங்களில் இலக்குக்கு அப்பால், முழுக்க வேறு ஒரு திசைக்கு நம்மை இட்டுச் செல்லக் கூடும். இப்போது நாம் வந்த வழியை மறந்துவிட்டு இன்னொரு சிறந்த வழியைக் கண்டுபிடிப்போம். சில நேரங்களில் நாவல் எழுதுவதும் அப்படித்தான். பத்து தவறுகளில் இரண்டு சரிகளே ஒரு நல்ல நாவலுக்கான வெளிச்சத்தைத் தரும். அதுவும் அந்த இலக்கு இதற்கு முன் அதிகமாகச் சென்றடையாததாக இருக்கையில்.
நேற்று நள்ளிரவு வரையில் இந்தச் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றும் தோன்றியது: ஒரு நாவலை எழுதி முடித்து பல மாதங்கள் ஆகும் வரைக்கும் நான் அதைக் குறித்த ஒரு கனவில்தான் இருக்கிறேன். அதைக் குறித்த வருத்தங்களும் மகிழ்ச்சிகளும் வெறும் கற்பனையே. கற்பனையாக ஒன்றை அடைந்து மகிழ்ந்து, கற்பனையாக அதை இழந்து மனம் உடைந்து ....
இப்படிச் சுழல்கிறது என் உலகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...