முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிரிக்கு உதவும் நல்ல மனம்



 கரப்பான் பூச்சிகளின் போராட்டங்களுக்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் சதி, சிலரது நிதியளிப்பு, திட்டமிடல் உதவி, வெளிநாட்டு சக்திகளின் பங்களிப்பு உள்ளது என்று பாஜகவினரும், குறிப்பாக பிரதமர் மோடியும் சொல்கிறார்கள். இது உண்மைதான், ஆனால் 'எதிர்க்கட்சி' என்பது இங்கு ஒரு பூடகமான சொல். ராகுல் காந்தியைக் கைது பண்ணி அவர்தான் எதிர்க்கட்சி என்பதாக பாஜகவினர் திரித்திட விரும்பினாலும் அவர்களுக்கே தெரியும் கரப்பான் பூச்சிகளைக் கிளப்பிவிட்டது மோடிக்கு எதிரான உட்கட்சி சக்திகள்தாம், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்தான் என்று. அதிலும் (முன்பு முக்கிய அரசுப் பொறுப்பில் இருந்தவரும் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியுமான ஒருவரின் பரிச்சயத்தில் உள்ளவர் நடத்தும்) அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் வழியாக கரப்பான் பூச்சிகளுக்குப் பணம் போனது தெரிய வந்துள்ளது. நமக்குத் தெரியாத பல வழிகளிலும் பெரும் தொகை சென்றிருக்க முடியும். ஒரு இன்ஸ்டா பதிவை இந்தியா முழுக்க சில நாட்களில் வைரலாக்குவது தனிநபர்களால் சாத்தியமானது அல்ல. மேலும் டிவி அலைவரிசைகள் கரப்பான்பூச்சிகளுக்கு கொடுத்த அபரிதமான கவரேஜும் உதவியது. இதுவும் தன்னிச்சையாக நடந்திருக்க முடியாது. பெரும் தொகையின்றி எந்த டிவி எடிட்டரும் இன்று செய்திகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதில்லை. செய்தி மதிப்பே இப்படித்தான் உருவாக்கப்படுகிறது. இதனாலே அரசியல் மட்டுமல்ல அரசியல் எதிர்ப்பும் இன்றும் மிகவும் செலவு பிடித்ததாக மாறிவிட்டது. இக்கேள்விகள் கரப்பான் பூச்சிகளின் ஆரம்ப நாட்களில் எழுப்பப்பட்டதாலே ஜெய்ப்பூரில் தன்னைத் தாக்கியவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என அபிஜீத் கிளப்பிவிட்டார். கவனியுங்கள்: எப்போதுமே ஆர்.எஸ்.எஸ்ஸை, இந்து மதத்தை, பார்ப்பனியத்தை விமர்சிக்காத, மோடியின் அராஜகங்களைக் கூட கடுமையாகத் தாக்காத அபிஜீத்தை ஏன் ஆர்.எஸ்.எஸ் தாக்க வேண்டும்? அது மட்டுமல்ல அண்மையி, ஆர்.எஸ்.எஸ் இதழ்கள் தொடர்ந்து கரப்பான் பூச்சிகளை பட்டும்படாமல் விமர்சித்து தம்மை கரப்பான் பூச்சிகளுக்கு எதிரானவர்கள் எனக் காட்டிக் கொள்கிறார்கள். இதற்கு முன் எப்போது ஆர்.எஸ்.எஸ் இப்படியான இளைஞர்கள் போராட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்தது? இப்படி இரண்டு தரப்பினரும் தலைப்புச் செய்தி நிர்வாகத்தில் இறங்கி தாம் விரோதிகள் என ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி அதன் பின் மறைந்து கொண்டார்கள். (2024இல் சீக்கிய விவசாயிகள் போராட்டத்தை அரசின்மைவாதிகள், வன்முறையாளர்கள் எனக் கடுமையாக விமர்சித்து அவர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். ஆனால் இம்முறை விமர்சனமும் அதற்கான பதிலும் வேறாக இருக்கிறது.)

அதேநேரம் இந்த கரப்பான் பூச்சி புரட்சியில் இளைஞர்கள் நம்பி களமிறங்கினார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அதற்கான கோபம் சமூகமெங்கும் இருக்கிறது. மோடி அரசு இதனாலே இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டது. அது என்றுமே மக்களின் கோபத்தைக் கண்டு கவலைப்பட்டதில்லை. மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்க வேண்டுமா, அவர்களுடைய வாக்குகள் பதிவாக வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் சர்வாதிகார அரசு அது. அவர்களுக்கு அரசுக்கான மக்கள் ஆதரவுத் தோற்றம் மட்டுமே முக்கியம். ஊடகங்கள் தம் வசம் இருக்கும்வரைக்கும் மொடியே மக்களின் ஒரே நாயகன் எனும் பிம்பத்தைத் தக்க வைக்க முடியும் என்றும் மிச்சத்தை சட்டத் திருத்தம், வாக்கு எந்திரம், தொகுதி மறுவரையறை மூலம் தம்மால் சாதிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். கரப்பான்பூச்சிகளை வைத்து மோடியின் உட்கட்சி விரோதிகள் இந்தத் தோற்றத்தில்தான் மண்ணை வாரிப் போட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர் அமலாக்கத்துறை, தேச விரோதச் சட்டம் என அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுப் பிடித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்களுடைய உதவி அவருக்கு அவசியம். இத்தனை நாட்கள் பொறுத்துவிட்டு காவலர்களை அனுப்பி தடியடி செய்து ஆட்டத்தைக் கலைத்திருக்கிறார். ஆனால் இப்போதும் தன் அசல் எதிரிகளை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. ராகுல் காந்தி அவரது பொறியில் சரியாக வந்து விழுந்திருப்பதால் அவரே அந்த கற்பனை எதிரியின் முகத்தைத் தற்காலிகமாகப் பெற்றிருக்கிறார்.
அரசியலை உற்று கவனிப்போருக்குத் தெரியும் மோடி அரசு ஒருபோதும் கரப்பான் பூச்சிகளைத் தூண்டி விடுவோர், அவர்களுக்கு நிதியளிப்போரைக் கைது செய்யாது என்று. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கான நிதியாதாரத்தை உறுதி செய்வதே மோடி அரசுதானே. இன்னொரு பக்கம், ஒரு சர்ச்சைக்குரிய கருத்து நிலவுகிறது. எ.பி.ஸி மலையாள யுடியூப் சேனலில் ஒருவர் பேசும்போது பாஜகவே ஏன் இப்போராட்டங்கள் இந்தளவுக்கு வளர்வதற்கு அனுமதித்திருக்கக் கூடாது எனக் கேட்கிறார். தில்லியின் ஜந்தர் மந்தரில் அபிஜீத் போராட்டத்தை ஆரம்பித்தது அனுமதியின்றிதான். தில்லி காவல்துறை அவர்களைக் கைது பண்ணாமல் வேடிக்கைப் பார்த்தது. சோனம் வங்சுக்கையும் 20 நாட்களுக்கு மேல் கைது பண்ணாமல் பெரும் கவனம் பெற அனுமதித்தார்கள். இதைப் பார்க்கையில் பாஜகவின் அணுகுமுறைதான் என்ன எனும் குழப்பம் ஏற்படுகிறது. பாஜக தம் மீது காங்கிரஸ் வைக்கும் விமர்சனங்களைத் திசை திருப்ப கரப்பான்களை அனுமதிக்கிறார்கள் எனும் இந்த வாதம் அவ்வளவு லாஜிக்காக இல்லை என நினைக்கிறேன். ஒருவேளை பாஜகவுக்குள் ஆர்.எஸ்.எஸ்ஸின் குழுவினர் புகுந்து தாக்கம் செலுத்தி இருக்கக் கூடும்.
அதேநேரம், தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், வேலையில்லா திண்டாத்தத்தைக் கண்டித்தும் போராட்டங்கள் நடக்க வேண்டியபோது விவாதம் ஒரு தேர்வுத் தாள் கசிவு குறித்து நடப்பது நியாயமா எனும் கேள்வி எனக்கு உள்ளது.
காங்கிரஸுக்குள்ளும் இந்த கரப்பான் பூச்சிகள் ஆம் ஆத்மியினரைப் போல தமது வாக்கு வங்கியை ஒழிப்பதற்காக வலதுசாரிகளால் அனுப்பபட்டிருக்கிறார்களோ எனும் ஐயம் இருப்பதாகவும், சோனியா காந்தி கரப்பான்களை வைத்து மோடி மீதான எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என நினைப்பதாலே அவர்களுடைய பிரதிநிதி வங்சுக்கைப் பார்க்கச் சென்றார் என்று கூறுகிறார்கள்.
இந்த தர்மசங்கட நிலையின்போது கடைசியில் மொத்த காங்கிரஸ் தலைமையும் போருக்குப் புறப்பட்டு வந்து மோடிக்கு உதவியிருக்கிறார்கள். பிரியங்கா ஒரு பக்கம் முழங்க, ராகுல் கைதாக இனி கொஞ்ச நாட்கள் அவர் இளைஞர்களை காங்கிரஸ் திசைதிருப்புகிறது என்று சொல்லிக் கொண்டே பின்வாசலில் வைத்து ஆர்.எஸ்.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒருவேளை பாஜகவின் பி டீம்தான் காங்கிரஸோ எனும் குழப்பம் ஏற்படுகிறது. ச்சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.
மேலும் படிக்க / பார்க்க:

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...