முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பரிசு



1
குணா வீட்டுக்குள் நுழைந்ததும் வெம்மையை உணர்ந்தான். திரைகளை விலக்கி காற்றை நுழைய விட்டான். உஷ்ணத்தில் திரைகள் விம்மின. அவன் கற்பனையை அது பலவிதங்களில் கிளர்த்தியது. குடியிருப்புக்கு வலமாய் ரயில் தண்டவாளம். அதை சைக்கிள், பைக், கால்கள் தயக்கமின்றி குறுக்கிட்டன. ஒரு குழந்தை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அப்பா மன்றாடி வலுக்கட்டாயமாக தூக்க முயன்று இடுப்பில் வைத்ததில் அது பொத்தென்று விழுந்தது.  நழுவி குதித்ததோ? ரயில் சைரன். மக்கள் தண்டவாளத்தை சுற்றி கூடினர். குணா திரையை மூடினான்.

அன்று பூரா வீடு பற்றின நினைவுகள் அலுவலகத்தில் அவனை அலைகழித்தன. அவனை ஒரு நரம்பு இசைக்கருவி போல் கற்பனை உருவங்கள் தொடர்ந்து முறுக்கேற்றின. விரல் நுனியிலும் கிறுகிறுப்பு. இரண்டு முறை தனிமையான கழிப்பறைக்கு சென்று குறியை தளர்த்த முயன்று அநாகரிகமாய் பட திரும்பினான். ரம்யா வேறு இதைக் குறித்து அறிவுறுத்தி இருக்கிறாள். அவளை நினைத்ததும் பேண்டுக்குள் மீண்டும் அழுத்தியது.

உடல் கிளர்ச்சி கொள்ளும் போது அபாரமான தனிமை குடி கொள்கிறது. அலுவலகத்தில் கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின் கணினி ஓசைகள், கிசுகிசுப்பு, காலடிகளின் பரபரப்பு அவனுக்கு தனது இருப்பை விட இல்லாமையையே உணர்த்தின. போர்னோவின் கதையின் பக்கங்கள் போல் வீடு அவன் காலத்திலும், அதற்கு வெளியிலும் வளர்ந்தது.  ரம்யா நாளை வருவாள்.
முதன் முறையாய் சொந்தபந்தங்கள் இல்லாத வீட்டுக்குள் அவனுக்கென ஒரு அவள். பெற்றோர்களும் சொந்தங்களும் அவனுடன் அவ்வீட்டில் இருந்ததுண்டு. ஆனால் அந்நியமான பெண்மையின் அருகாமை போல் யாரும் பாதுகாப்பை தர முடியாது. ரம்யாவின் ஆகிருதி வீட்டில் நினைத்த இடங்களை எல்லாம் நிரப்பியது. வீட்டுடன் சேர்த்து அவளது அங்கங்களை குளோசப்பில் யோசிப்பத்தை தவிர்க்க முடியவில்லை. குளோசப் காட்சிகளுக்கு மூச்சுத் திணறடிக்கும் குணம் உண்டு. அந்த அலுவலகம் தான் எத்தனை சிறியது.

வீட்டுக்கு வந்ததும் பரபரப்பானான். வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். ஹால் சுவர் கண்ணாடியை மூட வேண்டும். சோபா உறைகளை மாற்ற வேண்டும். புது கார்ப்பெட் மாற்றி, புத்தக அடுக்குகளை சுத்தம் செய்து, துவைக்காத துணிகளை மூட்டை கட்டி பீரோவில் பூட்டி, குளிர்பதனப் பெட்டியில் பீருடன் விஸ்கி பாட்டில்களும் அடுக்கணும். அவளுக்கு விஸ்கி அவ்வளவாய் பழக்கமில்லை. நாளை பழக்கமாகலாம். சாப்பாடு ஆர்டர் செய்ய …. அவனுக்கு அப்போது சட்டென பூனை நினைவு வந்தது. இருந்த சுவடே கூடாது, விரட்ட வேண்டும். அப்புறம் பிங்க் வண்ணத்தில் படுக்கை விரிப்பு விரிக்க வேண்டும். மென்வெளிச்சத்தில் துலங்கும் ஆப்பிரிக்க ஜோடியின் அணைப்பு ஓவியத்தை எதிரிலே மாட்ட வேண்டும். அந்த மார்புக் கூர்மை பார்த்து அவளுக்கு பொறாமை வருமா? மூக்கு வழி சிரித்தான். படுக்கை அறை ரூம் பிரஷ்ணருக்கான வாசனையை கிளர்ச்சியூட்டக்கூடியதாக தேர்வு செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.