பன்னிரெண்டு
வருடங்களுக்கு முன் ஒருநாள் அவசரமாக நண்பர் முஸ்தபாவின் புத்தகக்கடை அரட்டையில்
இருந்து அவசரமாக துண்டித்து “படிக்கணும்” என்று
கிளம்ப முற்பட்ட போது கவிஞர் நட.சிவகுமார் “என்ன படிக்கணும்?” என்றார். இளங்கலை பாடத்திட்டத்தில் உள்ள ஒரு நூலின்
பெயரை சொன்னேன். அவர் “டேய் நாங்கெல்லாம் பாடபொஸ்தகம் படிச்சதே இல்ல. உன்னால்
எப்படி பாடத்துல உள்ளத படிக்க முடியுது?” என்று
வினவினார். நான் அவரிடம் படித்து உயர்ந்த மதிப்பெண் பெற்று நல்ல வேலை பெற வேண்டிய
கனவை சொன்னேன். அவர் நக்கலாக சிரித்து விட்டு திரும்பிக் கொண்டார். பிறகு
பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு நான் என் மாணவர்களிடம் முதல் மதிப்பெண்
பெறுவதனால் எந்த பயனுமில்லை என்ற உண்மையை விளக்கி வருகிறேன். முதல் ரேங்க்
வாங்கினவர்கள் எல்லாரும் உயர்பதவி பெறுவதில்லை. பணம், அதிகாரம், அந்தஸ்துக்கும்
மதிப்பெண்ணுக்கும் சம்மந்தமில்லை. பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களை
உசுப்பேற்றுவதற்காக படித்தால் முன்னேறலாம் என பொய் சொல்லுகிறார்கள். கல்லூரிக்கு
வெளியே செய்யும் வேலைகள், அது அரசுத் தேர்வுகளோ தனியார் நுழைவுத்தேர்வுகளோ, தாம்
முக்கியம். இவை எதுவும் இல்லாமல் கூட மிக நன்றாக வாழலாம். பள்ளியில் இருந்து
கல்லூரி வரை ஒழுங்காய் தேர்வாகி சான்றிதழோடு வெளியேறினால் போதும்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்