முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஊழல் லீக்

"நீங்க கவலைப்படாதேள், குத்தம் பண்றாவாளை ஸ்வாமி காப்பாத்துவா. ஷேமமா வச்சுப்பா. தட்டில கொஞ்சம் தாராளமா அள்ளிப் போடுங்கோ"

ஊழல் குற்றச்சாட்டு காரணமாய் உச்சநீதி மன்றத்தால் பதவி நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் பிடிவாதக்காரர். வரும் செப்டம்பரோடு அவரது பதவிக் காலம் முடிகிறது. நீதிமன்றத் தலையீட்டால் அவர் பதவி இழந்த பின்னரும் தன்னை மீள் அமர்த்தும் படி கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிமன்றம் “முக்தல் விசாரணை குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் நீங்க தான் முதல் ஆள். உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று அவரை மீண்டும் கண்டித்த்து. இப்படி அவர் பதவியை அண்டிக் கொண்டே இருப்பதால் தான் இன்னொரு புறம் ஐ.பி.எல் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்க முடியாமலே போகின்றன. தலைவர் தான் பிரதான குற்றவாளி, அவரை பாதுகாப்பதிலேயே வாரியத்தின் ஆற்றல் எல்லாம் செலவாகும் என்றால் வேறு குற்றங்களை எப்படி விசாரிப்பது? இன்னொரு புறம் ஸ்ரீனிவாசன் வாரியத்தின் மீது தனக்குள்ள பிடியை விடாமல் இருப்பதிலும் உன்னிப்பாக இருக்கிறார். ச்சாங்க் மனோகர் போன்று அவருக்கு எதிரான ஒரு குழுவும் வாரியத்தினுள் உள்ளது. தன் பிடி இளகினால் ஊழல் வழக்கில் இருந்து தன் மருமகன் மெய்யப்பனை காப்பாற்றுவது சிரம்மாகும் என அவர் அறிவார்.

ஸ்ரீனிவாசன் பதவி நீங்கியதும் அவ்விடத்தில் தனக்கு அணுக்கமான ஷிவ்லால் யாதவை கொண்டு வந்தார். அவரும் ஊழல் பார்ட்டி தான். அதனால் அவர் இருந்தால் தன்னை கேட்டே எதையும் செய்வார் என ஸ்ரீனி அறிவார். இப்பிரச்சனையை மேம்போக்காய் விசாரிக்க ஒரு போங்கு குழுவை அமைத்தனர். இதை நீதிமன்றம் நிராகரித்த்து. இப்போது இன்னொரு விசாரணைக் குழுவின் பட்டியலை பரிசீலனைக்காக நீதிமன்றத்திடம் வாரியம் கொடுத்துள்ளது. முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன், முன்னாள் தலைமை நீதிபதி ஜெய்நாராயண் பட்டேல் மற்றும் ரவி சாஸ்திரி. மேம்போக்காய் ரொம்ப பந்தாவாய் தெரிந்தாலும் இப்பட்டியலும் தவறான நோக்கம் கொண்டதே.
ராகவன் கம்யுத் எனும் தமிழக TNCA கிரிக்கெட் கிளப் ஒன்றின் செயலாளர். இதன் தலைவர் ஸ்ரீனிவாசன். மேலும் இவ்வூழல் குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதி முக்தலிடம் தனக்கு ஸ்ரீனிவாசனை தனிப்பட்ட முறையில் தெரியும் எனக் கூறியுள்ளார். அதாவது ஸ்ரீனிவாசன் ஒருவித்த்தில் ராகவனுக்கு முதலாளியை போன்றவர்.
ரவிசாஸ்திரி வாரியத்திடம் சம்பளம் வாங்கும் வர்ணனையாளர். அவர் சமீபமாக ஸ்ரீனிவாசனை மிகவும் புகழ்ந்து பேசி வருபவர். இவரும் ஸ்ரீனிவாசனின் வேலைக்கார்ர் தான்.
இறுதியாக ஜெய்நாராயண் பட்டேல் ஷிவ்லால் யாதவின் மச்சான்.
இப்படி குடும்பத்துக்குள்ளே மாமன் மச்சான் சேர்ந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விசாரிக்க போகிறார்களாம். இந்த பட்டியலை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்தது. இவ்வழக்கை வாரியம் நீர்த்துப் போக வைக்க எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பது இதில் இருந்து தெளிவாகிறது. தற்போது வந்துள்ள செய்திப்படி நீதிமன்றம் இக்குழுவை நிராகரித்துள்ளது.
இவ்வழக்கில் நீதிமன்றமும் போதுமானபடி கராறாய் இல்லை. நியாயப்படி நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பிலான இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ போல் ஒரு வெளி அமைப்பு தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இதனால் சில நட்த்திர வீர்ர்களின் பெயர் அடிபடும் என நீதிமன்றம் அறியும். அப்படி நடந்தால் அது ஐ.பி.எல் வணிகத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் பொருளாதார மதிப்பை பாதிக்கும். இதே போல் தான் சஞ்சய் தத்தின் தண்டனையிலும் நடந்த்து. தத்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், அல்லாவிட்டால் காசு நஷ்டமாகும் என பெயிலில் போக அனுமதித்தார்கள். இதையே ஒரு சாதாரண ஆள் கேட்டால் அனுமதிப்பார்களா? இல்லை. நம்மூரில் பணக்கார்ர்களுக்காக நீதி இப்படித் தான் வளைக்கபடுகிறது. அந்த 13 பேரின் பெயர்களையாவது நீதிமன்றம் வெளியிட வேண்டும். குறிப்பாய் சென்னை சூப்பர் கிங்ஸில் ஊழல் செய்த அந்த வீர்ர்கள் யார்? அவர்களை காப்பாற்ற முயல்வது யார்? இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நாங்கள் நம்பவில்லை. குறைந்த்து உண்மையாவது வெளியாகட்டும். நாங்கள் இவர்களின் முகங்களில் சாணி வாரி அடிக்கிறோம். எங்களால் அது மட்டுமே செய்ய முடியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...