முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேஜ்ரிவாலுடன் ஒரு உரையாடல்




நிருபர்: “தனித் தமிழ்நாடு கோரிக்கையில் உங்களுக்கு பிரச்சனையில்லை என உங்கள் கொள்கை அறிக்கையில் கூறியிருக்கிறீர்களே?”
கேஜ்ரிவால்: “ஆம் மக்கள் அதை விரும்பினால் எங்களுக்கு பிரச்சனை இல்லை தான்”
நிருபர்: “அப்பிடின்னா தமிழ்நாடு பிரியலாமுன்னு சொல்றீங்க?”
கேஜ்ரிவால்: “ஆமா, ஆனா இதனால இந்தியாவோட தேசிய ஒருமைப்பாட்டுக்கு எந்த குந்தகமும் வரக் கூடாது”
நிருபர்: “அதெப்டிங்க முடியும்?”

கேஜ்ரிவால்: “ஓ அப்பிடியா ஒரே குழப்பமா இருக்கே! அப்பிடின்னா இதை எங்க கொள்கை அறிக்கையில் இருந்து எடுத்திடறோம்”
நிருபர்: “தமிழ்நாட்டுக்கான உங்க கொள்கை அறிக்கையில் மீதம் இருக்கிற ஒரே பாயிண்ட் அது தானே. அதையும் நீக்கினா…”
கேஜ்ரிவால்: “அப்பிடின்னா நான் அதுக்கு பதில் தர்ணா பண்ணுவேன். பிளாட்பார்மில தூங்குவேன்”
நிருபர்: “அதான் ஏற்கனவே பண்ணீட்டீங்களே”
கேஜ்ரிவால்: “ஓ! சரி நான் என் முதல்வர் பதவியை ராஜினாமா பண்றேன்”
நிருபர்: “நீங்க தான் இப்ப முதல்வர் கிடையாதே!”
கேஜ்ரிவால்: “அடச்சே, என்னா குழப்பம். இதுக்குத் தான் நான் தமிழ்நாட்டு பக்கமே வரதில்லங்குறது. மிச்சத்தை மிஸ்டர் மோடிகிட்ட பேசிக்கிறேன். அவர் தான் நமக்கு சரிப்பட்டு வருவாரு”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.