முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசனகர்த்தா


காட்சி 1

மீனவன்: “ஏய் மீனே என் தூண்டில்ல மாட்டிக்கிட்டியா. நான் சாத்தான்லே. என் கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது”

மீன்: “ஐயோ என்ன விடுலே. நான் மீன். என்ன விடுலே”

மீனவன் தூண்டிலை இழுத்து படகில் போடுகிறான்.

மீன்: “நான் சாகிறேன். ஐயோ நான் துடிக்கிறேன். துள்ளுறேன்.”

மீனவன்: “ஹா ஹா நான் சாத்தான்லே. நீ சாவுறே. நான் அதை பார்க்குறேன்.”


மீன்: “ஹா நான் செத்துட்டேன்”

ஆண்டவன் தோன்றுகிறார்: “நான் ஆண்டவன்”

மீனவன்: “என்னை மன்னியுங்கள் ஆண்டவரே. நான் பாவம் பண்ணீட்டேன்”

ஆண்டவன்: “உன்னை மன்னிச்சிட்டேன். ஏன்னா நான் ஆண்டவன்”

மீனவன்: “நன்றி ஆண்டவரே. ஸ்தோத்திரம். என் பாவக்கறைகளை கழுவீட்டீங்க. நான் அடுத்த மீனுக்கு தூண்டில் போடப் போறேன். ஏன்னா நான் சாத்தான்.”

ஒரு மீன் பக்கத்து மீன்களிடம்: “வாயைத் திறக்காதீங்கடீ. இவங்கிட்ட பேசினோம் வாயை மூட மாட்டான். பேசி பேசி வாயில தண்ணீ ஏறி ஏற்கனவே ஒரு மீன் செத்து போச்சு.”

டைரக்டர்: “இவ்வளவு வசனம் வேணாம்யா. வாட் ஐ திங்க் இஸ் ஒன் ஷாட், ஜஸ்ட் ஒன் ஷாட் – அதில சீனை முடிச்சிடலாம். “மீன் தூண்டில் ஆண்டவன் ஸ்தோத்திரம்” தட்ஸ் இனப். அடுத்த கிளைமேக்ஸ் சீனை சொல்லு.”

காட்சி 2:
ஹீரோ துப்பாக்கியால் சுடுகிறான்: “நான் உன்ன சுட்டுட்டேன். குண்டு உன்னை நோக்கி வருது. இதோ வந்திருச்சு. உன் இதயத்தை துளைச்சிருச்சு. நீ சாக போறே. நீ வில்லன்லே நீ சாகப் போறே”

வில்லன்: “ப்ளீஸ் சீக்கிரம் சொல்லி முடிங்க. நான் செத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.”

காட்சி 3
காலியான திரையரங்கு. ஒரே ஒரு பார்வையாளன் அசந்து தூங்குகிறான்.
திரை ஒளிர திடீரென ஒருவர் தோன்றுகிறார்: “வணக்கம் நான் இப்படத்தின் வசனகர்த்தா. படம் முடிந்து விட்டது. நீங்கள் போகலாம்”

பார்வையாளன் கண்ணை திருமிக் கொண்டு: “நான் இந்த படத்துக்கு டிக்கெட் வாங்கின பார்வையாளன். எனக்கு தூங்கணும்”

வசனகர்த்தா: “இந்த படத்தில் வந்த முக்கியமான படிமங்கள், குறியீடுகளை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். உங்களைப் போன்ற பொறுப்பற்ற பார்வையாளர்களால் இந்த படம் ... உலகப்புகழ் பெற வேண்டிய... இந்த படம் தோற்று விட்டது. இனி நான் இப்படத்தில் புதைந்துள்ள ஆழமான உண்மைகளை விளக்க போகிறேன். அதாவது...”

பார்வையாளர்: “யோவ் தியேட்டர் ஓனர் புரொஜக்டரை ஆப் பண்ணுய்யா”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...