முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கையின் தொடர் வெற்றியும் இந்தியாவின் நிலையும்


இங்கிலாந்தில் இலங்கையின் தொடர்வெற்றி எதிர்பாராதது. அதற்கு ஒரு காரணம் சங்கக்காரார், மஹிளா போன்ற சீனியர்கள் தன்னலமின்றி அணிக்காக தொடர்ந்து உழைப்பது

இன்னொன்று இலங்கையின் ஒழுக்கம் மற்றும் உழைப்பு மற்றும் அணி உணர்வு

இதை வைத்து இந்தியாவும் வென்று விடுமோ என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இலங்கை ஒரு புது அணியாக சென்றது. இந்தியா அப்படி அல்ல - வீரர்கள் .பி.எல்லால களைத்து போயிருக்கிறார்கள் - இஷாந்த், ஷாமி போன்றோர் நல்ல ஆட்டநிலையில் இல்லை. வெளிநாடுகளில் அஷ்வினின் ரெக்கார்ட் ரொம்ப மோசம். பந்தும் சுழலாது. புவனேஷ்வர் மட்டுமே நன்றாக வீசக் கூடும்.


இன்னொரு முக்கிய விசயம் இந்தியாவுக்கு எதிராக இருக்கும். நாம் எப்போதும் சராசரியாக 90-120 ஓவர்களை ஒரு இன்னிங்ஸில் வீசுகிறோம். எதிரணி நன்றாக ஆடினால் 150 ஓவர்களுக்கு மேலே. நம் வேகவீச்சாளர்கள் ஆளுக்கு 20 ஓவர்கள் வீசினதும் களைத்து விடுவார்கள். மூன்று வேக வீச்சாளர்களால் உத்வேகமுடன் 60 ஓவர்கள் தான் வீச முடியும். தோனி மூன்று வேக வீச்சாளர்களுக்கு மேல் எடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பார். மிச்சமுள்ள 60-80 ஓவர்களை யார் வீசுவது? அஷ்வின்? விராத் கோலி, ரோஹித் ஷர்மா? நம் வேகவீச்சாளர்களை ஆளுக்கு 35 ஓவர்களுக்கு மேல் வீச சொன்னால் ஆர்வமின்றி குறைந்த வேகத்தில் வீசுவார்கள். அடுத்த டெஸ்டில் பலவீனமாகி இன்னும் மோசமாகி வீசுவார்கள். மூன்றாவது டெஸ்டில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்படும்.

இது அறிந்து தோனி வேகவீச்சாளர்களை அதிகம் வீச வைக்க மாட்டார். அதனால் அவர் ஜடேஜாவை தேர்வு செய்வார். பந்து சுழலவே செய்யாத இங்கிலாந்தில் அஷ்வினும் அவரும் 50 ஓவர்களுக்கு மேல் வீசினால் ஒரு விக்கெட்டுக்கு மேல் விழாது. அந்த குறிப்பிட்ட கட்டத்தில் எதிரணி சுலபமாக 200 ஓட்டங்கள் எடுக்கும். வேகவீச்சாளர்களை ஒழுங்காக ஆடினால் இங்கிலாந்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 400க்கு மேல் எடுக்கலாம். 

தோனி இதை அறிவார்அவரது நோக்கம் எதிரணியை 300க்குள் சுருட்டுவது அல்ல. 500 இரண்டு நாட்களில் அடிக்க வைப்பது. அதன் பின் தம் மட்டையாட்டத்தால் டிரா பண்ணலாம் என நினைப்பார். ஐந்து டெஸ்டுகளில் 3 நாட்கள் நாம் மோசமாக மட்டையாடினால் 3-0 என்ற நிலையில் தொடரை இழப்போம். தோனியின் திட்டத்தின் சிக்கல் இது தான்.


இந்தியாவுக்கு தேவை நல்ல உடல்வலுவும் ஒழுங்கும் கொண்ட வேகவீச்சாளர்கள். களைக்காமல் 140 கி.மீ வேகத்தில் 35 ஓவர்கள் வீசுபவர்கள். அது இல்லாமல் நாம் வெளிநாடுகளில் மாங்கா அடி வாங்கிக் கொண்டே இருப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...