முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னய்யா சவுண்டு அது?


உதவியாளர்: “ஐயா உங்க பொறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த தொண்டர் ஒருவர் இந்த வாழ்த்தட்டையை கொடுத்திட்டு போயிருக்கிறாரு”

தலைவர்: “என்னைப் பத்தி எதனாச்சும் புகழ்ந்து எழுதியிருக்குதா?”

உதவியாளர்: “ஒரு கேள்வி கேட்டிருக்காருங்க. எப்படி நீங்க மட்டும் இத்தன நாள் உயிரோட ஆரோக்கியமா திடமா இருக்கீங்கன்னு?


தலைவர்: ம்ம்ம் (பெருமூச்சு விடுகிறார்): அண்ணா போயிட்டார். ராமசந்திரன் போயிட்டான். ம்ம்ம் ... நான் இன்னும் இருக்கேன்.”

சின்னதம்பி கையில் பூச்செண்டுடன் வருகிறார்.

தலைவர்: “இவன் கிட்ட கேட்போம். யோவ், நம்ம தொண்டர் ஒரு கேள்வி கேட்டிருக்கார். அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறெ?”

சின்ன தம்பி அட்டையை வாங்கி பார்க்கிறார்.

சின்னதம்பி: “தெரியல. எனக்கு ஒவ்வொரு பொறந்த நாள் வரும் போதும் கோவமா வருது, ஆனா நீங்க சந்தோசமா இருக்கீங்க.”

தலைவர்: “நீ கடவுளை நம்புறியா?”

சின்னதம்பி: “கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும். ஆனா இப்போ கடவுள் நம்பிக்கையும் போச்சு.”

தலைவர்: “கடவுளை அதிகமா திட்டுறவன் அதிக நாள் இருப்பான். ஹா ஹா”

உதவியாளர்: “அதையே பதிலா எழுதட்டுமாங்க?”

தலைவர்: “எழுது எழுது. கூடவே கொஞ்சம் அடைமொழி எல்லாம் போட்டு பாட்டு மாதிரி எழுது” (சின்னதம்பியை பார்த்து) “தொண்டர் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலியே. என்ன நினைக்கிறே?”

எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறது. பெரிய தம்பி: “நல்லவங்கள ஆண்டவன் சீக்கிரமா கூப்பிட்டிருவான். ஆனா கெட்டவங்கள...?”

தலைவர்: “யாருய்யா அது? என்ன சவுண்டு அது?”

உதவியாளர்: “எனக்கு ஒண்ணும் கேட்கலியே”

தலைவர் சின்னதம்பியிடம்: “உனக்கு கேட்டுச்சா?”

சின்னதம்பி: “நான் ஏதும் சொல்ல விரும்பல”

தலைவர்: “எல்லா ஓட்டையையும் மூடணும் சொன்னேன் இல்லியா. பண்ணுனியா நீ ?...” (சில கெட்டவார்த்தைகளை உதிர்க்கிறார்)

உதவியாளர்: “ஒரு ஜன்னல் விடாம மூடிட்டேன். காத்தே வர மாட்டேங்குது. ஏஸியை கூட மூடிட்டேன்”

பெரியதம்பி: “காது கூட ஓட்டை தான்”
தலைவர்: “யோவ் என்னய்யா சவுண்டு இது, நல்ல நாள் அதுவுமா.” (உதவியாளரை நோக்கி மேலும் சில கெட்டவார்த்தைகள் சொல்லுகிறார்)

பெரியதம்பி: “டி.வி, ரேடியோ, மக்களோட வாய்...”

தலைவர்: (சின்னதம்பியை நோக்கி): “அவனை கட்சியை விட்டு தூக்கிடு. அப்ப தான் அடங்குவான்”

சின்னதம்பி: “ஏற்கனவே தூக்கிட்டோமுங்க”

தலைவர்: “அப்பிடீன்னா நீ கட்சியே விட்டு போயிடு. அவன் கொஞ்ச நாள் உள்ளே வரட்டும். அப்போ தான் இந்த சத்தம் கேட்காம இருக்கும். எனக்கும் பொழுது போவும்” (பிறகு தனக்குள்ளே) “ராமசந்திரனுக்கு இந்த டெக்னிக்கெல்லாம் தெரியாது. தெரிஞ்சிருந்தா இன்னும் உயிரோட இருந்திருப்பான்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...