Skip to main content

தீபாவளியும் அமேசானும்


தீபாவளி தள்ளுபடி விற்பனையை ஒட்டி தன்னால் கையாள முடியவில்லை என பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களிடம் மின்னஞ்சலில் மன்னிப்பு கேட்டது. ஆனால் ஆர்டர் செய்தவர்களுக்கு பொருளை ஒழுங்காக நேரத்தை அனுப்பியது. உண்மையில் அவர்களை விட மோசமாய் சொதப்பியது அமேசான் தான். தீபாவளியை ஒட்டி வந்த ஏகப்பட்ட ஆர்டர்களை அவர்களால் சரியாக கொரியர் பண்ண முடியவில்லை. அமேசானின் பேஸ்புக் பக்கம் புகார்களால் நிரம்பி வழிகிறது. தீபாவளியினால் பணியாளர்கள் விடுமுறையில் போவதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட அமேசானுக்கு தனது கொரியர் நிறுவனம் எப்படி எந்நேரம் பொருட்களை கொண்டு சேர்க்கிறது என்பது பற்றி போதுமான தகவல் இல்லை என்பது தான் சிக்கல். கொரியர் ஆட்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல் தருவதோ தொடர்பில் இருப்பதோ இல்லை. வாடிக்கையாளர் சேவை தொடர்பாளரை அழைத்தால் உடனே மன்னிப்பு கேட்டு உறுதி அளிப்பார்கள். தினமும் கூப்பிட்டாலும் இதோ புலி வரும் புலி வரும் என்பார்கள். ஆனால் வராது.

இந்த கண்ணாமூச்சி விளையாட்டினால் அமேசானின் பெயர் ரொம்பவே கெட்டுவிட்டது. தீபாவளி முடிந்து தான் பலருக்கும் பொருட்கள் வந்து சேரும் போல. தீபாவளிக்கு பரிசு ஆர்டர் பண்ணினவர்கள் தாம் பாவம். நானும் அமேசானில் ஆர்டர் பண்ணின ஒரு பொருள் வந்து சேரவில்லை. அமேசானிடம் புகார் அளித்து, வாடிக்கையாளர் சேவை தொடர்பாளர்களிடம் பேசு பேசி அலுத்து விட்டது. நம்மூரில் ஒரு மழை பெய்தால் டிரான்ஸ்பார்மர் வெடிக்கிறது. சாலைகளில் மக்கள் காலை வைத்தால் உள்ளிழுத்துக் கொள்கிறது. வீடுகளுக்குள் சேற்று வெள்ளம் ஓடுகிறது. வண்டிகளுக்குள் நீர் புகுந்து நின்று போகின்றன. மின்சாரத்தை நிறுத்தி வைக்கிறார்கள். எங்கள் வீட்டில் மின் இணைப்புகள் பழையன என்பதால் அடிக்கடி ஏதாவது ஒரு விளக்கோ ஒயரோ நமுத்த பட்டாசு போல் வெடிக்கிறது. நாளை மாலை தீபாவளிக்காக ஏராளமான மக்கள் சென்னையை காலி பண்ணப் போவதால் போக்குவரத்துக்கு மலச்சிக்கல் வந்து யாரும் நகர முடியதபடி ஆகும் என்கிறார்கள். அதனால் நாளை சீக்கிரமாக வீட்டுவருவது நல்லது என அறிவுரை சொல்கிறார்கள். உண்மையில் ஒரு பண்டிகை விழா என்றால் கொண்டாட்ட மனநிலை வர வேண்டும். மழை என்றால் சிலாகிக்க வேண்டும். ஆனால் இங்கு நாம் என்ன ஆபத்தெல்லாம் சந்திக்க போகிறோமோ என கவலைப்பட வேண்டி இருக்கிறது. இங்கு கொண்டாட்ட தினங்களில் ஒரு பதற்ற நிலை தான் ஏற்படுகிறது. அவசரமாய் எப்படியாவது மகிழ்ச்சியை, உற்சாகத்தை ஒரு கவளை முழுங்கி ஒரு வாய் தண்ணீர் குடித்து விடுவோம் என பதறுகிறோம். பண்டிகை தினங்களில் உருவாகும் மிகப்பெரும் மக்கள் இடப்பெயர்வை சமாளிக்கும் கட்டமைப்பு திறன் நம் நாட்டுக்கு இல்லை. இத்தினங்களில் பயணிக்கிறவர்கள் உண்மையில் ரொம்ப பாவம். நாளைய தினம் எத்தனை பேர் கோயம்பேட்டி மூச்சுத்திணறப் போகிறார்களோ!


பண்டிகை என்றால் எந்த சேவையும் இயங்காது. அமேசானை மட்டும் குற்றம் சொல்லி என்ன ஆகப் போகிறது. பழகிப் போச்சு. எல்லா இடர்களையும் மறந்து கொண்டாட கற்றுக் கொண்டு விட்டோம். மழையும், பண்டிகையும், பந்தும், கொண்டாட்டங்களும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் இல்லாத போது தான் நம் ஊர் இயல்பாக சரியாக இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் நாய்கள் எங்காவது போய் ஒரு வாரத்துக்கு ஒளிந்து கொள்ளும். நாமும் ஒளிந்து கொள்ள வேண்டியது தான். ஒளிந்திருந்தபடி கொண்டாட வேண்டியது தான். 

Comments

krish said…
அழகாக சொல்லிவிட்டீர்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...