முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாலி சர்ச்சையும் மிகையும்

Image result for puthiya thalaimurai attack

இன்றைய ஆங்கில இந்துவின் நடுபக்கத்தில் வித்யா வெங்கட் புதிய தலைமுறையின் நிகழ்ச்சி சம்மந்தமான தாலி சர்ச்சை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் வைக்கிற விவாதம் சுவாரஸ்யமானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நகர்வாழ் பெண்கள் தாம் தாலியை எப்போதும் அணிவதில்லை என்கிறார்கள். குறிப்பாக அலுவலகம் போகும் போது. குடும்பமும் இதற்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கிறது. நிகழ்ச்சியில் ஒரு பெண் தாலி ஒரு நாயின் சங்கிலி போல் தன்னை பிணைத்துள்ளதாக கூறுகிறார். இது அனைத்து பெண்களுக்கும் பொருந்துகிற செய்தியும் அல்ல.

 பெண்களின் கல்வி, வாழ்க்கைத்தரம், குடும்பத்தின் மரபு சார்ந்த நிலைப்பாடு, குடும்பத்துக்குள் பெண்ணுக்குள்ள அதிகாரம் பொறுத்து தாலி ஒரு விலங்காகவோ சமசரப் பொருளாகவோ ஆகிறது. நன்கு படித்த, வேலை பார்க்கிற, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள் இன்று தாலியை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான். அதாவது குடும்ப நிகழ்ச்சிகளில் அணிகிறார்கள். அல்லது ஆடைக்கு பொருத்தமாக இருந்தால் அணிகிறார்கள். சிலர் அலுவலகத்துக்கு அணிவதில்லை. சிலர் அலுவலகத்தில் அணிவார்கள், ஆனால் வீட்டில் அணிய மாட்டார்கள். கிராமத்திலும் படித்து வேலைக்கு போகிற பெண்கள் வெளியே செல்லும் போது முன்பு போல தாலியை வெளியே தெரியும் படி முந்தானைக்கு வெளியே போட்டுக் கொண்டு போவதில்லை.
ஆக ஒரு பக்கம் தாலியினால் பெண்கள் அடிமைப்படுகிறார்கள் என்பதும் முழுக்க உண்மையல்ல. காலமும் நிலைமையும் மாற நமது மரபு சடங்குகளும் அதற்கேற்றபடி எப்படி தகவமைகின்றன என்பது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பார்வை. எதுவும் நீண்ட காலத்துக்கு புனிதமாக இருப்பதில்லை. பொருளாதாரம், சமகால வாழ்க்கைப் பார்வை காரணமாய் நாம் நம்மையே அறியாமல் நம் மரபை சற்றே மாற்றியமைக்கிறோம்; எந்த நம்பிக்கைகளையெல்லாம் பாதுகாக்கலாம், எவையெல்லாம் பெயருக்கு தக்க வைக்கலாம், கைவிடலாம் என நம் சமூக மனம் முடிவெடுக்கிறது. நாம் நுணுக்கமான வகையில் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமே பெரும்பாலும் உணர்வதில்லை. இது போன்ற சர்ச்சைகள் தாம் நாம் அடைகிற மாற்றங்களை காட்டுகின்றன.


வித்யாவின் கட்டுரையில் இன்னொரு பக்கம் தாலி செண்டிமண்ட் பற்றி நமக்குள்ள மனோபாவமும் போலி தான் என வருகிறது. சினிமா தான் இந்த செண்டிமெண்டுக்கான ஆதாரம் என்கிறார். இது முழுக்க உண்மையில்லை தான். சமூகத்தில் இன்றும் தாலி செண்டிமெண்ட் உள்ளது. அப்படிப்பட்ட பெண்கள் நகரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைக்கு போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஒரு கலவை. இருவகையான ஆட்களும் இருக்கிறார்கள். தாலியை அடிமை சங்கிலி என்பதும், அதை கேள்வி கேட்டால் இந்து அமைப்பினர் கொந்தளிப்பதும் இரண்டுமே மிகை தான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.