முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பையை வெல்ல நியுசிலாந்த் என்ன செய்ய வேண்டும்?

.

1.    எதிரணியின் பலவீனத்தை அறிந்து தாக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் என்ன? துவக்க மட்டையாளர்களும் 4ஆம் எண்ணில் வரும் கிளார்க்கும் நல்ல ஆட்டநிலையில் இல்லை. அதன் பிறகு பந்தை தூக்கி அடிக்கும் ஆல்ரவுண்டர்கள் தாம் வருகிறார்கள். ஆஸ்திரேலிய மட்டையாட்டத்தின் அச்சு ஸ்மித் தான். பிறரை முதல் பத்து அல்லது இருபது ஓவர்களுக்குள் வீழ்த்தி விட்டு மேக்ஸ்வெல்லை இருபத்தைந்து ஓவருக்குள் ஆட வைத்து விட்டால் ஆஸ்திரேலியாவை கடும் நெருக்கடிக்குள் தள்ளலாம். சுருக்கமாக சவுதி மற்றும் போல்ட் சேர்ந்து நான்கு விக்கெட்டாவது தமது முதல் ஸ்பெல்லில் எடுக்க வேண்டும்

2.   ஆஸ்திரேலியாவின் இன்னொரு பலவீனம் பந்து வீச்சு. அவர்களிடம் முழுநேர பந்து வீச்சாளர்கள் மூவரே உள்ளனர். அவர்களையும் முதல் பத்து ஓவர்கள், பவர் பிளே, இறுதி பத்து ஓவர்கள் என பிரித்து வீச வைப்பார் கிளார்க். இதனிடையே இவர்களுக்கு விக்கெட் கொடுக்காமல் இருந்தால் மேக்ஸ்வெல், பாக்னர் மற்றும் வாட்ஸன் வீசும் 20 ஓவர்களில் குறைந்தது 160 எண்களாவது எடுக்கலாம். மிச்ச மூவரின் முப்பது ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்தால் முன்னூறை சுலபமாய் அடையலாம். 160 ஓட்டங்கள் எடுக்க முழுநேர வீச்சாளர்களுக்கு சுலபத்தில் விக்கெட் கொடுக்க கூடாது. அப்படி என்றால் தான் மேக்ஸ்வெல் போன்றோரின் அல்வா பந்து வீச்சை அடித்து கிழிக்க முடியும்.
3.   என்னதான் திட்டமிட்டு போனாலும் ஆஸ்திரேலியாவின் காட்டுசுற்றல் மட்டையாட்டம் உங்கள் ஆசனவாயில் சூட்டைக் கிளப்பி மண்டையை குழப்பி விடும். ஆனால் நிதானமாய் பந்து வீசுவது அவசியம்.
4.   ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை. ஒற்றை, இரட்டை ஓட்டங்களை நிறைய எடுப்பவர்கள் 300 ஓட்டங்களை அடைவது எளிது. கிளார்க் இதை செய்ய நியுசிலாந்தை அனுமதிக்க மாட்டார். பெரிய ஷாட்களை அடிக்க தூண்டுவார். களத்தடுப்பை உள்வட்டத்துக்கு கொண்டு வந்து நெருக்கடி கொடுத்து உயரப் பந்துகள் இட வைப்பார். இந்த பொறியில் மாட்டி பந்தை தூக்கி அடித்தால் அம்பேல். பொறுமை முக்கியம்.

5.   நியுசிலாந்தின் வெற்றி வாய்ப்பு 30-40% தான். ஆனாலும் ஒரு சின்ன எறும்பு யானையின் காதுக்குள் நுழைந்து செம குடைச்சல் கொடுக்க முடியும். நாளை பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.