முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியும் யாகூப்பும்

ஏன் மதக்கலவரம் நடத்திய மத,சாதிய பெரும்பான்மைவாதிகளுக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்படவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஏன் யாகூப்பும் கலவரக்காரர்களும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்படுவதில்லை?


இரண்டு விசயங்கள்

 1) பாகிஸ்தான் துணையோடு நடத்தப்பட்ட மும்பை வெடிகுண்டு தாக்குதல் தேசத்திற்கு எதிரான போராக கருதப்படுகிறது. இது போன்ற குற்றங்களுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளிக்க தலைப்படுகிறது. ஆனால் மதக்கலவரங்களை நடத்துபவர்களை இதே போல் நடத்துவதில்லை. நாம் எதிர்காலத்தில் மதக்கலவரக்காரர்களை தேசத்துரோகிகளாய் கருதும் சட்டம் ஒன்றை கொண்டு வர முயலலாம். அப்போது நீங்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு விடை கிடைக்கும்.


2) சீக்கியர்களை கொன்ற காங்கிரஸுக்கும் இஸ்லாமியரைக் கொன்ற பா..கவுக்கு மக்கள் ஏன் திரும்பத் திரும்ப ஓட்டளித்தனர்? என்னைப் பொறுத்தவரையில் இத்தேர்தலில் பா..கவுக்கு ஓட்டளித்தவர்கள் ஒவ்வொருவரும் குஜராத் படுகொலைகளுக்கு பொறுப்பு தான். இக்கோணத்தில் யோசிக்க ஏன் தயங்குகிறீர்கள்? ஏன் கட்சிகளையும் தலைவர்களையும் சாடி விட்டு திருப்தியாகிறோம்? ஓட்டளித்த மக்களை என்ன செய்வது? ஆக இது நம் ஜனநாயகத்தின் பிரச்சனையும் தான். இந்திய சட்டங்களை உருவாக்கியவர்கள் இச்சிக்கல்களை கருத்தில் கொள்ளவில்லை. அடுத்த தேர்தலில் எல்லாருக்கும் வாய்ப்புள்ளது. அதை பயன்படுத்தி மக்களே தண்டனை அளிக்கலாமே? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? இந்தியாவின் பெருவாரியான குடிமகன்களின் அடிமனதில் சிறுபான்மையினர் மேல் கடுமையான வெறுப்பும் வன்மமும் உள்ளது. அவர்கள் மறைமுகமாய் இக்கலவரங்களை ஆதரிக்கிறார்கள். அதனால் தான் கலவரங்களை நடத்தி ஆயிரக்கணக்கானோர் சாக காரணமாய் இருந்தவர்களை ஓட்டளித்து பதவியில் அமர வைக்கிறார்கள். இந்த வன்மத்தின் அடிப்படையை களைவது பற்றி யோசிக்க வேண்டும். ஒரு கருத்தில் இருந்து தான் பெரும் குற்றங்கள் நிகழ்கின்றன. அக்கருத்தை வேரறுக்க வேண்டும். அத்வானிகளும் மோடிகளும் அக்கருத்தின் வெறும் புறவடிவங்கள். அவர்கள் இடத்தில் நாளை நூறு பேர் வருவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...