முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மாங்கா” காமிக்ஸில் காந்தி




ஜப்பானிய “மாங்கா” காமிக்ஸில் காந்தியின் வாழ்க்கைசரிதம் படித்தேன். ரொம்ப எளிமைப்படுத்தப்பட்ட ஆனால் நளினமான அழகான புத்தகம். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்.
வளர்ந்தவர்களுக்கும் நல்ல அனுபவமாய் இருக்கும். இதில் ஒரு விசயம். காந்தியை தவிர இந்தியர்கள் மற்றும் வெள்ளைகாரர்களுக்கு முக்கு சற்று சப்பையாகவும் கண்கள் சுருங்கி நீளமாகவும் உள்ளது. படங்களை வரைந்த கிஸுகி எபினே தன் நாட்டினரை கவர்வதற்காய் இப்படிய ஒரு ஜப்பானிய சாயலை அளித்திருக்கலாம். அவ்விதத்தில் நமக்கு இது ஒரு வித்தியாசமான காட்சிபூர்வ அனுபவத்தை கொடுக்கிறது. இதில் வரும் நேரு ஒன்பதாம் வகுப்பு பையனைப் போல் தோன்றுகிறார். ஆனால் சுதந்திரம் கிடைக்கும் காலத்தில் நேருவுக்கு வயதாகி விட்டது என்பதை ஓவியர் மறந்து விட்டார் போல. அம்பேத்கர், வல்லபாய் பட்டேல் போன்றவர்களையும் இன்னொரு பக்கம் கோட்சே, ஆர்.எஸ்.எஸின் கதைகளையும் சேர்த்திருந்தால் கதை இன்னும் நுட்பமாய் சுவாரஸ்யமாய் வந்திருக்கும். கிஸுகி எபினே தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பணி இலக்காக தான் இதை எடுத்துக் கொண்டிருக்கிறார். கிடைத்த நேரத்தில் காந்தியின் சுயசரிதை, அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல் என மூன்று புத்தகங்களை படித்திருக்கிறார். அவர் காந்தியின் கொள்கைகள் பற்றி அம்பேத்கர் எழுதியதையும் படித்திருந்தால் இன்னும் பயன்பட்டிருக்கும்.
 கிஸுகி இந்நூலில் எழுதியுள்ள சிறுகுறிப்பில் காந்தியை அறியும் போது அவர் தனது பெற்றோர்க்ளை நினைவுபடுத்தியதாய் குறிப்பிடுகிறார். அவரது போதனைகள் அன்றாட வாழ்வுக்கு பயன்படாதவை என அவர் ஆரம்பத்தில் நினைக்கிறார். இந்த கருத்து நமக்கு வேறுநாட்டை சேர்ந்த புதுதலைமுறையினர் காந்தியை படிக்கையில் எப்படியான சித்திரத்தை பெறுவார்கள் என புரிய வைக்கிறது. ஜப்பான் அமெரிக்காவை போன்றே நவீனமயமாக்கலையும் நகரமயமாக்கலையும் தீவிரமாய் ஏற்றுக் கொண்ட நாடு. இப்போது அங்கு எந்த பாரம்பரிய நம்பிக்கைகளை அந்நியமாய் பார்க்கும் ஒரு தலைமுறை உள்ளது. அவர்களுக்கு காஸ்மோபொலிட்டன் நுண்ணுணர்வுடன் முராகாமி எழுதுவது தான் பிடித்திருக்கிறது. அதனால் காந்தி அந்நியமாய் தோன்றுவதில் வியப்பில்லை.
குறிப்பின் முடிவில் தன்னை மிகவும் கவர்ந்த காந்தியின் புகைப்படம் ஒன்றை பற்றி குறிப்பிடுகிறார். காந்தி அதில் ஒரு குழந்தையை கையில் ஏந்தி ஒரு குழந்தையை போல் பொக்கைவாயால் சிரிக்கிறார். எப்போதும் நமக்கு ரொம்ப சீரியசாய் யோசிப்பவராய் முரண்டுபிடிப்பவராய் தோன்றுகிற காந்தியும் குழந்தையை கையில் வாங்கும் போது மற்றொரு குழந்தை ஆகி விடுகிறார். மொத்த நூலையும் விட இந்த குறிப்பு ஆழமாய் இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...