சஹீர்கான் ஓய்வு
பெறுகிறார். உலகின் தலைசிறந்த இடதுகை வீச்சாளர்களில் ஒருவர். வஸீம் அக்ரமைப் போல் இவரும்
ஒரு கலைஞர். நான் அவரை அக்ரமும் வெகுஅருகில் வைப்பேன். வேகமும் தந்திரமும் அறிவும்
பந்தை பலவிதமாய் பயன்படுத்தும் திறனும் கொண்டவர். ஸ்ரீநாத் இவரைப் போன்று முக்கியமான
வேகவீச்சாளர் என்றாலும் சஹீரின் ஆவேசமும் மூர்க்கமும் அவரிடம் இல்லை. நம்முடைய வேகவீச்சாளர்கள்
பொதுவாய் சாதுவாக தோன்றின காலத்தில் அவர் நிறைய ஆவேசத்தையும் தந்திரத்தையும் அறிமுகம்
செய்தார். சஹீரின் வழித்தோன்றலாய் முகமது ஷாமியை தான் பார்க்கிறேன். சஹீர் நமது இளந்தலைமுறை
வேகவீச்சாளர்களின் பயிற்சியாளராய் பங்காற்றினால் சிறப்பாய் இருக்கும்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்