முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நயன்தாரா சீஹல்லின் விருது அதிர்ச்சி மதிப்பு போராட்டம்



தாத்ரியில் இந்துத்துவா அரசியல்வாதிகள் நடத்திய படுகொலையை கண்டித்து நயன்தாரா சாஹல் தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப அளிப்பதாய் கூறியுள்ளார். அவர் 1987இல் விருது பெற்றார். அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு தான் சீக்கியர்களை காங்கிரஸ் அரசு கொடுமையான முறையில் வேட்டையாடி கொன்றது. அந்த படுகொலைகளைக் கண்டித்து ஏன் சாஹல் அப்போதே விருதை வாங்க மறுக்கவில்லை. அதன் பின்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், மதக்கலவரங்கள் நடத்தப்பட்ட போதும் அவர் ஏன் விருதை திரும்ப அளிக்கவில்லை ஆகிய கேள்விகளை ராஜ்திப் சர்தேசாய் இக்கட்டுரையில் எழுப்புகிறார்.

 சாஹல் இதற்கு அளிக்கும் பதிலான “இப்போது மட்டுமே இந்துத்துவா அரசு ஆட்சியில் இருக்கிறது” என்பது ஏற்கும் படியாய் இல்லை. ஏனென்றால் காங்கிரசும் மென்மையான இந்துத்துவா அரசியல் கொண்டது தான். நரசிம்மராவ் ஆட்சியில் அவர் மதக்கலவரங்களை, இஸ்லாமியர்களின் படுகொலைகளை தடுக்கவில்லை. ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் சார்பு கொண்டவர். அறுபதுகளிலேயே ஐந்து மாநிலங்களில் பசுவதை சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் அரசாங்கம் தான். காந்தியின் மரணத்துக்கு கருத்தியல் பின்புலம் நல்கிய சவார்க்கரை விடுதலை போராட்ட தியாகி என வர்ணித்து அவர் மீதான தடையை நீக்கி அவரை சுதந்திரமாய் இயங்க அனுமதித்ததும் காங்கிரஸ் தான். எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி சீக்கியர்களின் படுகொலைக்கு எதிராய் அன்று தீவிரமாய் போராடிய சாஹல் ஏன் விருதை மட்டும் ஏற்றுக் கொண்டார் என்பது.
 நான் அடிப்படையில் இதை ஒரு அதிர்ச்சி மதிப்பு போராட்டமாகத் தான் பார்க்கிறேன். ஆனால் அத்தகைய போராட்டங்கள் தற்காலிகமானவை. அரசை நாம் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம், ஆனால் ஒரேயடியாய் அதனுனான உறவை துண்டிக்கும் விதத்தில் செயல்படக் கூடாது. அது ஒருவிதத்தில் இந்துத்துவா சக்திகளுக்கே சாதகமாய் முடியக் கூடும்.

87இல் அவர் விருதை ஏற்றதில் தவறில்லை. அது அவரது இலக்கிய செயல்பாட்டுக்காய் வழங்கப்பட்டது. நீங்கள் ஒரு அரசை விமர்சிக்கும் வேளையில் அது அளிக்கும் அங்கீகாரத்தை மறுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம் விமர்சனத்துக்கு உள்ளாகிறவர்கள் நம் எதிர்தரப்பினரே அன்றி எதிரிகள் அல்ல. எதிர்தரப்பினோடு முரண்படும் போது அவர்களை முழுக்க நிராகரிக்க வேண்டியதில்லை. முரண்படுவது ஒருவரை மாற்றத்தானே ஒழிய மறுக்க அல்ல.

சாஹலை தொடர்ந்து அஷோக் வஜ்பய் என்னுடம் இன்னொரு பெருந்தலையும் விருதை திரும்ப அளிக்கிறார். சாஹல் நேருவின் சகோதரியின் மகள். அஷோக் வஜ்பய் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லலித் கலா அகாதெமியின் தலைவராய் இருந்தவர். முன்னாள் அரசு அதிகாரி. இருவருக்குமே ஒரு மறைமுக காங்கிரஸ் தொடர்பு உள்ளது. இருவரும் அதிகார வட்டத்தை சேர்ந்தவர்கள். எலைட்டுகள். சாஹல் தான் காங்கிரசோடு தொடர்பற்றவர் என கூறினாலும் அவரது போராட்டங்களுக்கு என்று ஒரு தொடர்ச்சி இல்லை என்பது சிக்கலானது. கடந்த பத்து வருடங்களில் இதைவிட கொடுமையான மதக்கலவரங்களை பா.ஜ.க நடத்திய போது அவர் எங்கு போனார்? காங்கிரஸ் ஆட்சியில் மோசமான ஊழல்கள் நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்? ஒருவேளை இப்போது அவர் தன் சகிப்புத்தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் அரசியல் எதிர்வினை ஆற்றுகிறவர்கள் அவ்வப்போது மட்டுமே உயிர்கொள்கிறவராய் இருக்க கூடாது. அது பல சந்தேகங்களை தூண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.