முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவதச்சன் விருதும் பேட்டியும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி அவரை “ஜன்னல்” இதழுக்காய் ஒரு சிறுபேட்டி எடுத்துத் தர முடியுமா எனக் கேட்டார்கள். ஜென், தமிழ் கவிதை மரபு, அவரது கவிதைகளின் மைய குறியீடான படிக்கட்டு பற்றி நான்கு கேள்விகள் கேட்டேன். மிக அழகாய் பதில்கள் அளித்தார். என் கேள்விகள் அவருக்கு பிடித்திருந்தன. ”நேரில வாங்க, இன்னும் ஜாலியா நிறைய பேசலாம்” என்றார். ”நிச்சயம் கோவில்பட்டிக்கு வரேன்” என்றேன்.
இன்றைய தினம் தேவதச்சனை படிப்பதிலும் அவரைப் பற்றி யோசிப்பதிலும் அவருடன் உரையாடுவதிலும் உற்சாகமாய் போனது. பேட்டிக்கு நான் அளித்த தலைப்பு “தேவதச்சன் – படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதர்”.

தேவதச்சனுக்கு “விஷ்ணுபுரம் விருது” அளிக்கப்படுவது அவ்விருதை நிச்சயம் துலங்க செய்கிறது. தனிப்பட்ட முறையில் ஜெயமோகனுக்கு தேவதச்சன் கவிதை மீது அதிருப்தி உண்டு என அறிவேன். தேவதச்சன் கவிதைகள் அறிவார்த்தமான தத்துவ பதிவுகள் அவை, கவிதைகள் அல்ல என பத்து வருடங்களுக்கு முன்பு அவர் என்னிடம் பற்றி கூறியதாய் நினைவு. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் தேவதச்சன் தன்னுடன் எழுத ஆரம்பித்தவர்களைக் கடந்து எங்கோ சென்று விட்டார். அவர் கவிதைகள் இன்றும் புதுமையும் தனித்துவமும் மாறாமல் உள்ளன. புதிதாய் வாசிக்க வருகிற பலரும் பேஸ்புக்கிலும் பிளாகுகளிலும் அவர் கவிதைகளை பகிர்வதையும் அது குறித்து எழுதுவதையும் பார்க்கிறேன். இத்தனைக்கும் தேவதச்சன் இருட்டில் சில்வண்டு போல் வாழ்பவர். பத்திரிகைகளில் பேட்டி அளிப்பது, கட்டுரை எழுதுபவது, டிவியில் தோன்றுவது, இலக்கிய நிகழ்ச்சிகளில் தாளிப்பது ஆகிய தன் புகழ் பரப்பும் காரியங்களை செய்ய மாட்டார். ஆனால் தமிழின் இளம் எழுத்தாளர்களுடன் மறைவில் இருக்கும் நக்சல் தலைவரைப் போன்ற உறவில் இருப்பார். யாரிடம் பேசினாலும் “தேவதச்சன் இது போல சொன்னார்…” என அவரை மேற்கோள் காட்டுவார்கள். மிக கொஞ்சமாய் அவர் எழுதி பிரசுரிக்கும் கவிதைகள் பெரிய கவனத்தை பெறுகின்றன. ஜெயமோகன் மிகவும் கூர்மையானவர். அவர் இதையெல்லாம் கவனிக்கிறார். தேவதச்சன் பற்றின தன் பார்வையை மறுபசீலனை செய்திருக்கிறார். இது பாராட்டத்தக்கது. இந்த விருதின் பெயரை மாற்றி, ஒரு விருதுக்குழுவையும் உருவாக்கினால் அதற்கு இன்னும் நம்பகத்தன்மை கூடும் என்றாலும் இப்போதைக்கு இது போதும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.