முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறுப்பின்மையும் பெண்களும்




பெண்கள் வேலையில் பொறுப்பானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்றொரு நம்பிக்கை உள்ளது. நானும் என் அனுபவத்தில் அவர்களின் பணி அக்கறையையும் அர்ப்பணிப்பையும் கண்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு தேய்வழக்கும் தான். இந்த பொது பிம்பத்தை மறுத்து ஹிந்துவில் வைஷ்னா ராய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆண்களுக்கு இணையாக பொறுப்பின்மையும் சோம்பேறித்தனமும் மிக்கவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள் என்கிறார். கூடுதலாய் எடுத்ததற்கெல்லாம் கண்ணீர் சிந்தி பிரச்சனையை பெரிதாக்கி தம் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் தப்பிக்க நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறார். முக்கியமான கட்டுரை.

வெள்ளபாதிப்பை ஒட்டி டிவியில் ஒளிபரப்பான பேட்டிகளில் நேரே ஏன் தாய்மார்களிடம் மைக்கை நீட்டுகிறார்கள் என யோசித்திருக்கிறார்களா? அவர்கள் நம் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் உரித்து தொங்க போடுவது பார்த்தால் நமக்கே நடுக்கம் ஏற்படுகிறது. நம் சட்டமன்றம் துவங்கும் நாட்களில் இது போன்ற பெண்களை அனைத்து பகுதிகளிலும் இருந்து அழைத்து வந்து எம்.எல்.ஏக்களை கேள்வி கேட்க விட வேண்டும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை வெளியே அனுப்புவது போன்ற நாசூக்கெல்லாம் இவர்களிடம் பலிக்காது.
 பெண் உளவியலின் சாவியே நம் கலாச்சாரத்தில் உள்ள பெண் தெய்வ பிம்பங்களில் இருக்கிறது. பழுத்து சிவந்த கண்களும், கையில் குருதி சொரியும் வேலும், கழுத்தில் கபால மாலையுமாய் எத்தனை எத்தனை பெண் தெய்வங்களை நம் மரபில் வழிபட்டு வந்திருக்கிறோம். உக்கிர பெண் தெய்வம் இது ஆசியாவுக்கே உரித்தான ஒரு வடிவம். சொல்லப்போனால் இந்து மதத்துக்கேயான ஒரு அடையாளம். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் கொந்தளிக்கக் கூடும். அப்போதெல்லாம் அவர்கள் முன் பணிந்து அமைதிப்படுத்த வேண்டும் என நம் முன்னோர்கள் நமக்கு மறைமுகமாய் கூறியிருக்கிறார்கள் எனலாம்.

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.