முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவும் வெள்ளமும்



இந்த வெள்ளத்தின் போது சகமனிதர்களிடம் அபாரமான சமூக அர்ப்பணிப்புணர்வை, சேவை மனப்பான்மையை பார்த்தோம். ஒவ்வொருவரும் கண்கூட கண்டோம். சாருவை தவிர. இம்மாத உயிர்மையில் இவ்வாறு எழுதுகிறார்: “வெள்ளத்தில் சென்னை மூழ்கிய போது வெள்ளத்தோடு கூடவே மனிதாபிமானமும் பெருகி ஓடியதாக பத்திரிகைகள் கூவிக் கொண்டிருந்தன. விரல் நகத்தின் அழுக்கு அளவுக்கு தான் அந்த அபிமானம் நிலவியதாக தெரிந்தது எனக்கு. பேனை பெருமாளாக்கியது போல் அந்த அழுக்கை தான் ஒரேயடியாக பேசுகிறார்கள் எல்லாரும் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் மரணம் ஒன்று போல் தாக்கிய போது மனிதன் பயந்தான். அதனால் ஒருவனுக்கொருவன் உதவிக் கொண்டான். அவ்வளவு தான் விசயம். இதே நகரத்தில் வெள்ளத்துக்கு பதிலாக ஒரு மதக்கலவரம் சூழ்ந்திருந்தால் இதே மனிதாபிமானிகள் கையில் ஆயுதத்தை தூக்கியிருப்பார்கள்”.

சாருவின் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. மனிதர்கள் ஒரேயடியாய் நல்லவர்கள் ஆகி விட்டதாய் யாரும் கூறவில்லை. அதை நினைத்து சாரு பதற்றப்பட வேண்டாம். ஆனால் மனிதனுக்குள் தூங்கும் நன்மை விழிக்க இது ஒரு சந்தர்ப்பம் ஆகியது. மரண பயம் தான் காரணம் என நான் நினைக்கவில்லை. சிறு குழந்தைகளுக்கு கூட சகமனிதர்களுக்கு உதவும் விருப்பம் உண்டு என ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். அதே நேரம் சிறு குழந்தைகளுக்கு எறும்பை நசுக்கவும் நாயை கல்விட்டு அடிக்கவும் விருப்பம் உண்டு. மனிதன் இந்த இரண்டு விழைவுகளின் கலவை. இப்போதைக்கு நன்மையின் எழுச்சியை கொண்டாடுவோம்.
இந்த வெள்ளம் வந்த போது தான் என்றில்லை. பொதுவாய் தமிழர்கள் இரக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவர்கள். இங்கே தெரியாத ஒரு ஊரில் கூட நான் தைரியமாய் தனியே நிற்பேன். என்னை பாதுகாக்கவும் உதவவும் ஏதோ இரு கைகள் நீளும் என அறிவேன். எத்தனை எத்தனை இதயங்களின் அன்பை இதுவரை இந்த சிறு வாழ்வில் பெற்றிருப்பேன். தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வை நீங்கள் தமிழகத்தில் மட்டுமே உணர முடியும். கேரளாவில் ரோட்டில் தனித்து ஆதரவின்றி நின்றால் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். பெங்களூரிலும் அதே தான். அதனால் தான் எனக்கு இந்த ஊரை விட்டுப் போக என்றும் மனமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.