முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தின் உண்மையான வெகுமதி


வாசகர்கள் பொதுவாய் இரண்டு வகையாய் எதிர்வினையாற்றுவார்கள். (1) அறிவார்த்தமாய், படைப்பை பகுப்பாய்ந்து. (2) உணர்ச்சிகரமாய், அந்த படைப்பே தமது தான் எனும் உரிமை கோரலுடன்.
 முதல் எதிர்வினை ஆர்வமூட்டும். படைப்பு பற்றி ஒரு தூலமான புரிதலை உருவாக்கவும் உதவும். இரண்டாவது எதிர்வினை ஆழமான திருப்தி தரும்.

கடந்த சில நாட்களாக எனது “ரசிகன்” நாவலை படித்து விட்டு தோழி ஒருவர் தன் நெகிழ்வான மனப்பதிவுகளை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து கொண்டே இருந்தார். “ஏன் அந்த குழந்தையை கொன்றீர்கள்?” என்று கேட்டார். “என்னால் தூங்கவே முடியவில்லை. விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு அதைப் பற்றியே யோசித்தேன்” என்றார். எழுதும் போது என்னையும் கலங்கடித்த இடங்களே அவரையும் நெகிழ வைத்துள்ளது வியப்பாக இருந்தது. இன்று நாவலை படித்து முடித்து விட்டார் போல. “அடப் பாவி சாதிக்கையும் கொன்று விட்டீர்களா? என்னால் தாங்க முடியவில்லை. அழுது விட்டேன். ஏன் அப்படி செய்தீர்கள்?” என்று ஒரு செய்தி அனுப்பி இருந்தார். நாவல் துவங்குவதில் இருந்தே சாதிக்கின் பாத்திரம் மரணத்தை நோக்கி தான் செலுத்தப்படுகிறது என்று பதிலெழுதினேன். அவரை “கொல்லாமல்” இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. மரணம் மட்டுமே அவனுக்கு நிம்மதி தரும். இதை எழுதும் போது எனக்கு முராகாமியின் நார்வேஜிய வனம் நாவல் நினைவு வந்தது. அதில் நாயகன் வதானாபேவுக்கு கிடைக்கிற ஒவ்வொரு அனுபவமும் காதல் உறவும் அவனுக்கு காயங்களை மட்டுமே பரிசளிக்கும். இதைத் தெரிந்தே அவன் நிந்தனைக்கு ஆட்கொடுத்தபடி கொண்டிருப்பான். தான் மிகவும் நேசிப்பவர்களின் பொருட்டு வேதனையை ஏற்றுக் கொண்டிருப்பான். நாவலின் துவக்கத்தில் இருந்தே அவன் கதை வேறெப்படியும் இருக்க முடியாது எனத் தோன்றும். நாவலின் தொனியிலோ அல்லது பாத்திரத்தின் ஆதார மனப்பிழையிலோ அவன் விதி எழுதப்பட்டு விடுகிறது. எழுத்தாளனே நினைத்தாலும் பிறகு அப்பாத்திரத்தை காப்பாற்ற முடியாது.

”ரசிகன்” வெளியான பின் எனக்கு பலவிதமான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆழமான திருப்தி அளித்தது இந்த நெகிழ்வான எதிர்வினையில் தான். ஒருவிதத்தில் இந்நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியது போன்ற ஒருவித மகிழ்ச்சி. வேறெதனாலும் இல்லை. ஒரு கதை மிகவும் உண்மையாகவும் அணுக்கமாகவும் ஒரு வாசகருக்கு தோன்றும் போதே எழுதியவனுக்கு தான் பொய்யான ஒன்றை எழுதவில்லை எனும் நம்பிக்கை ஏற்படுகிறது. எழுத்தின் உண்மையான வெகுமதி அது தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...